Onetamil News Logo

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்ந்தது.

Onetamil News
 

ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ; தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக உயர்ந்தது. 


சென்னை 2020 மார்ச் 29 ; தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ள நிலையில்,  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.இன்று மதியம் வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக இருந்தது. இந்த நிலையில் மாலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘‘புதிதாக 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்’’எனத் தெரிவித்தார்.மேலும், ‘‘ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், அதில் சிலர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்’’ என்றும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஐ தாண்டியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo