Onetamil News Logo

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் ;மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார், பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.

Onetamil News
 

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் ;மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார், பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி 2020 ஜூலை 31 வெள்ளிக்கிழமை ;தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. 
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் அனைவருக்கும் மனிதநேயத்தோடு உதவி செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவிற்கிணங்க பல்வேறு துறையை சார்ந்தவர்கள் நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். 
அதுபோல் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று வரமால் தடுக்கும் வகையில் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உத்திரவிற்கிணங்க மன்ற அலுவலகம் அருகில் உள்ள அங்கன்வாடி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு பத்திரிகையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சீனிவாசகன், கௌரவ ஆலோசகர்கள் அருண், வசீகரன், அன்பழகன், ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார், பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். டாக்டர் கார்த்திகேயன் தலைமையிலான மருத்துவகுழு பரிசோதனை செய்தனர். 
நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன் ,செயற்குழு உறுப்பினர்கள் இசக்கிராஜா, ராஜாசிதம்பரம், சரவணப்பெருமாள், மன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சிதம்பரம், முத்துராமன்,  ஆகியோர் உடனிருந்தனர். 
பின்னர் மன்ற உறுப்பினர்கள் கொரோனா பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர். அதன்பின் காவலர்கள் மற்றும் பொதுமக்களும் பரிசோதனை செய்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo