Onetamil News Logo

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் மர்ம மரணம் ;போலீசார் விசாரணை

Onetamil News
 

லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் மர்ம மரணம் ;போலீசார் விசாரணை


கோவை 2019 ஏப்ரல் 6; லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரி காசாளர் மர்மமான விதத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை: கோவை காரமடையில் லாட்டரி அதிபர் மாட்டினின் உதவியாளர் பழனி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின். இவர் லாட்டரி தொழில் செய்து வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் நாடு முழுவதும் செய்து வருகிறார்.
இந்நிலையில் மார்ட்டின் கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பதாக வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினார்கள்தமிழகம் முழுவதும் கடந்த 30ம் தேதி மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொரட்பாக மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரியின் காசாளர் பழனியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அவர் தனது கையை அறுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் துடியலூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், வெள்ளியங்காடு மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  எதிரே உள்ள குட்டையில் காசாளர் பழனி பிணமாக மீட்கப்பட்டார். பழனியின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo