Onetamil News Logo

விபத்து -மீட்பு - முதலுதவி - நமது மேட்டுப்பாளையம் குழு  உதவி செய்தனர் 

Onetamil News
 

விபத்து -மீட்பு - முதலுதவி - நமது மேட்டுப்பாளையம் குழு  உதவி செய்தனர் 


 கோத்தகிரி 2019 ஏப்ரல் 5 ; கோத்தகிரி மலைப்பாதையில் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு மாலை 5.50 மணியளவில் குடும்பத்துடன் டெம்போ டிராவலர் வாகனத்தில் புதுக்கோட்டை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டெம்போ டிராவலர் வாகனம் பிரேக் ஃபெயிலியர் ஆகிய காரணத்தினால் தானாகவே வேகம் அதிகரிக்க தொடங்கி விட்டது ஓட்டுனர் கட்டுப்பாட்டை மீறி முன்னால் சென்றுகொண்டிருந்த காரை அதிவேகமாக இடித்து தள்ளி இந்த டெம்போ டிராவலர் மலைப்பாதையின் அளவில் உள்ள மரத்தின் மீது ஏறி தலைகுப்புற சாய்ந்து விடுகிறது. இதற்கு முன்னர் சென்றுகொண்டிருந்த அந்த கார் ஆனது டெம்போ டிராவலர் பிடித்த வேகத்தில் கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி அந்த காரும் விபத்துக்குள்ளாகிறது.. நிலைகுலைந்த அந்த கார் ஓட்டுனரின் சாதுரியத்தினால் பெரும் விபத்தில் இருந்து தப்பித்தது ஆனால் கார் முழுவதும் சேதம் அடைந்து இருந்தது..
நாங்கள் கோத்தகிரி சென்றுவிட்டு இன்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் சரியாக 5.55மணிக்கு அந்த இடத்தை அடைகிறோம். செய்வதறியாமல் திகைத்து போய் இருந்த விபத்தில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்டு முதலுதவிகள் மேற்கொள்ளப்பட்டது.
பத்து நிமிடத்திற்குள் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இருபுறமும் நெரிசலில் சிக்கித் தவித்தனர்..
அந்த இடத்தில் செல்போன் டவர் சிக்னல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.. மிகவும் வேதனையானது..
கீழ் நோக்கி மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் மூலமாக தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டது.
சற்று நேரத்தில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் தரப்பட்டது.
அந்த வழியாக வந்த go taxi மற்றும் ரெட் டாக்ஸி வாகன ஓட்டுனர்கள் ஆம்புலன்ஸ் வருவதற்கு  கால தாமதம் ஆகிக் கொண்டு இருந்ததை கண்டு உடனடியாக விபத்தில் அடிபட்டு சிறு காயங்களுடன் தவித்தவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இந்த இரண்டு கார் ஓட்டுனர்களும் தாமாக முன் வந்தனர்..மனிதநேய மிக்க மாமனிதர் கள்..
விபத்தில் சிக்கிய வாகனங்கள் நகர்த்தப்பட்டு சாலைப் போக்குவரத்து சீர் படுத்தப்பட்டது.. ரயிலைப் பிடிக்க, விமானத்தை பிடிக்க பரிதவித்துக்கொண்டிருந்த முகமறியாத பலருக்கு இது பேருதவியாக இருந்திருக்கும்.
மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இருந்து காவல் ரோந்து வாகனம் விபத்து நடந்த இடத்தை வந்தடைந்தது. அதற்குள் 3 அவசர ஊர்தி 108 வாகனங்கள் வந்து சேர்ந்தன..
டெம்போ டிராவலர் இல் இருந்த அவர்களது உடமைகளை மற்றும் அனைத்து பொருட்களையும் மேட்டுப்பாளையம் கொண்டு செல்ல அவ்வழியாக வந்த மகேந்திரா பிக்கப் வேன் ஓட்டுனரிடம் உதவி கேட்டதும் உடனடியாக அவர் அந்த உடமைகளையும் அவர்கள் குழுவின் ஒருவரையும் அழைத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார் மனிதாபிமானம் மிக்க செயல்
நேரம் ஆக ஆக இருள் சூழ ஆரம்பித்தது அது யானைகள் சாலையைக் கடக்கும் வனப்பகுதி.. recovery van வருவதற்கு காத்திருந்த நேரம் அது குறுகிய வளைவு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதால் மேலிருந்து வேகமாக வரும் வாகனங்கள் மீண்டும் இந்த இடத்தில் சாலையில் கிடக்கும் டெம்போ டிராவலர் வேன் மீது மோதி விட்டால் இன்னொரு விபத்து அந்த இடத்தில் நடந்து விடும் என்பதை கருத்தில் கொண்டு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் நமது குழுவினர் போக்குவரத்து சீர்படுத்தும் பணியிலும் மேலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் விதத்திலும் 7 மணி வரை சேவையாற்றினர்.
இந்த இடைப்பட்ட வேளையில் விபத்துக்குள்ளான அந்த குடும்பத்தினருக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நமது மேட்டுப்பாளையம் குழு நண்பர்கள் உடன் இருந்து உதவினர்.
அந்த குடும்பத்தினர் அவருடைய ஊர்களுக்கு சென்று சேர மாற்று வாகன ஏற்பாடுகளை நமது குழுவினர் செய்தனர்.
விபத்து நடந்த கணம் முதல் 7.15 மணி வரை தொடர்ந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணிக்கு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த குன்னூரை சேர்ந்த நண்பர் ஒருவர் தன்னார்வலராக கரம் கோர்த்து செயல்பட்டது போற்றுதலுக்குரியது
விபத்தில் சிக்கிய காரை recovery van வர கால தாமதம் ஆனதால் பரிதவித்து கொண்டிருந்த நிலையில் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டேண்ட் டூரிஸ்ட் கார் ஓட்டுனர்கள் சங்கத்தைச் சார்ந்த நமது நண்பர்கள் ரூமி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக நேரில் வந்து விபத்தில் சிக்கிய அந்தக் காரை சரி செய்து ஓட்டி வந்து பத்திரமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையம் வந்தடைந்தனர்

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo