Onetamil News Logo

ஜமைக்கா நாட்டில் நடந்த அலங்கார போட்டியில் இந்திய அளவில் போட்டியிட்ட கோவையை சேர்ந்த திருமதி ரிதிஷா ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் ஐக்கிய நாடுகள் தெற்காசியா விருதுகளை வென்றிருக்கிறார்.

Onetamil News
 

ஜமைக்கா நாட்டில் நடந்த அலங்கார போட்டியில் இந்திய அளவில் போட்டியிட்ட கோவையை சேர்ந்த திருமதி ரிதிஷா ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் ஐக்கிய நாடுகள் தெற்காசியா விருதுகளை வென்றிருக்கிறார்.


கோவை 2018 ஆகஸ்ட் 8 ;ஜமைக்கா நாட்டில் நடந்த அலங்கார போட்டியில் இந்திய அளவில் போட்டியிட்ட கோவையை சேர்ந்த திருமதி ரிதிஷா ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் ஐக்கிய நாடுகள் தெற்காசியா விருதுகளை வென்றிருக்கிறார்.
கோவை சாய்பாபா காலனி ஆர்எம்பி குடும்பத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் தேவிகா ரமேஷ் மகள் ரிதிஷா நிவேதா உள் அலங்கார வடிவமைப்பாளராக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் சமூகப்பணியில் ஆர்வம் அதிகமாக இருந்த இவருக்கு இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும்  எடுத்துச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ரேஷ்மா ஸ்ரீ ஜாய் அவர்கள் உலக நாடுகளில் இருந்து 220க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டி jamaica நாட்டிலுள்ள கிங்ஸ்டன் நகரில் ஜூலை மாதம் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா கொரியா தாய்லாந்து பெலாரஸ் போன்ற நாடுகளிலிருந்தும் அழகிகள் கலந்து கொண்டனர் அவர்களிடம் என்னுடைய சமூகப்பணியை திருமதி ஜமைக்கா, மற்றும் திருமதி அமெரிக்கா என தேர்வு செய்ய பட்டவர்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவர்களும் அதை ஆமோதித்து நான் தங்கியிருந்த விடுதியில் அருகிலிருந்த பள்ளிகளுக்கு சென்று நூறு குழந்தைகளுக்கு தங்களது விருப்பத்திற்கேற்ப உணவு சமைத்து பரிமாறவும் முடிவு செய்து செயலில் ஈடுபட்டோம் அதில் இந்திய நாட்டின் பெருமையை சேர்க்கும் வகையில் நான் பிரியாணியை ஆவலுடன் செய்து அனைவருக்கும் பரிமாறினேன் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிட்டனர் அதுமட்டுமின்றி பள்ளி சுவற்றில் வர்ணம் அடித்து ஓவியம் வரைந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கினோம் பின்னர் போட்டிகளில் கலந்து கொண்டு தெற்காசியா எனும் பட்டத்தை  எனக்கு தேர்ந்தெடுத்த பின்னர் ஒரு வருடகாலம் சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர் சமூகப்பணியில் ஆர்வம் மிகுதியாக இருந்த எனக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது அப்போது கோவையில் நிலா ஃபவுண்டேஷன் பற்றியும் மலைவாழ் மக்களுக்கு நான் செய்துவரும் பணிகள் பற்றியும் அவர்களது வாழ்க்கை மேம்பட வருவாய் ஈட்டுவது பற்றியும் விளக்கினேன் ஒவ்வொரு சுற்றாக வேற்றி பெற்ற நிலையில் இறுதி சுற்றுக்கு 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்
இதில் இறுதியாக எனக்கு ஐ, நா, அம்பாசிடர் 2018 மற்றும் தெற்காசிய விருதுக்கு தேர்வு செய்தனர் பின்னர் இதே விருதை இரண்டாம் இடத்தில் தாய்லாந்து ஜமைக்கா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பெற்றனர் இந்த விருது பெற்றவர்கள் ஐநாசபை யுடன் சேர்ந்து ஓராண்டிற்கு சமூக பணியாற்ற வேண்டும் நான் எனது நிலா பவுண்டேஷன் மூலம் இந்த பணியை மேற்கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார் மேலும் நமது நாட்டில் குழந்தைகள் தவறாக கையாளப்படுகின்றனர் அதைத் தவிர்க்கும் விதமாக அனைவரையும் ஒன்று திரட்டி செயல்படுவேன் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்க பாடுபடுவேன் என்றார்
கோவையிலிருந்து ரமேஷ்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo