Onetamil News Logo

கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று பார் நாகராஜன் மனு அளித்துள்ளார்.

Onetamil News
 

கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று பார் நாகராஜன் மனு அளித்துள்ளார்.


கோவை 2019 மார்ச் 15 ; கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாலியல் சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று பார் நாகராஜன் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி யிடம் பாலியல் வழக்கு தொடர்பாக புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நாகராஜன் (எ) முத்துசாமி,அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பாலியல் வீடியோ வழக்குக்-கும், எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் எனது அரசியல் வாழ்விலும், பொதுவாழ்விலும் எனக்கு வேண்டாத சிலர், இந்த வழக்கில் என்னையும் சம்பந்தப்படுத்தி தவறான பதிவுகளை பதி விட்டு வருகின்றனர். இது என்னையும் என்னுடைய குடும்பத்தினரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது. நேற்று முதல் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், வேறு யாரோ உள்ள வீடியோவில், நான் இருப்பதாக தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோவில் இருப்பது நானல்ல. எனக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. என் மனைவிக்கு குழந்தை பிறந்து 25 நாட்களே ஆன நிலையில், என் குழந்தையின் முகத்தை பார்க்கக்கூட முடியாத நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.இந்த வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரிலும், காவல் நிலைய முதல் தகவல் அறிக்கையிலும் எனது பெயரே இல்லை. ஆனால், நீதிபதியிடம் என்னை அழைத்துச் சென்றனர். இவ்வழக்கில் என்னுடைய பெயரே இல்லை என்று கூறி, இவ்வழக்கு தொடர்பாக காவல்துறை எப்போது கூறினாலும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறி நீதிபதி அனுப்பிவிட்டார். என் மேல் தவறான குற்றச்சாட்டை பரப்பி வருகிறார்கள். மீண்டும் தவறாக குற்றச்சாட்டு பரப்பாமல் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo