Onetamil News Logo

 கல்லூரி மாணவி கற்பழித்து கொலை: கோவை மாவட்டம் கொலை,பாலியல் வழக்கில் கொடி  கட்டி பறக்கிறது 

Onetamil News
 

 கல்லூரி மாணவி கற்பழித்து கொலை:கோவை மாவட்டம் கொலை,பாலியல் வழக்கில் கொடி  கட்டி பறக்கிறது 


கோவை 2019 ஏப்ரல் 7 ;கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில்  தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் பிரகதி என்ற மாணவி மர்மமான முறையில் நேற்று சாலையோரம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், பிரகதிக்கு நிச்சயம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.வழக்கம் போல் நேற்று கல்லூரியில் இருந்து  வெளியே வந்த அவரை அடையாளம் தெரியாத இருவர் பின் தொடர்ந்து சென்றதாக அப்பகுதி மக்கள் போலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலிசார் ஆய்வு நடத்தினர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் சதீஷ்  என்ற இளைஞர் போலிசாரிடம் சிக்கினார். ஒட்டன் சத்திரத்தை சேர்ந்த சதீஷ், பிரகதிக்கு உறவினராவார்.
ஏற்கெனவே திருமணமான சதீஷ், பிரகதியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதலை பிரகதி ஏற்றுக் கொள்ளவில்லையாம். இதனிடையே பிரகதிக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது.கழுத்தறுத்து அரை நிர்வாணத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவி கொலை வழக்கில்  இளைஞர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
   சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில்  சதீஷ்  சிக்கியதாக   தனிப்படை போலீசார்    தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த உறவினரே கொடூரமான முறையில் மாணவியை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையறிந்த சதீஷ், பிரகதி மேல் இருந்த ஆத்திரத்தில் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதை இவர் மட்டுமே செய்திருக்க முடியாது என்பதால் இந்த கொலைக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த பிரகதியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் ஆகியவை வெட்டப்பட்டு இருப்பதும் போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo