Onetamil News Logo

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு என்ன?  

Onetamil News
 

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு என்ன?  


டெல்லி ,2019 ஆகஸ்ட் 5 ; 35-ஏ காஷ்மீர் மக்களுக்கு சிறப்புரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ தொடர்பான சர்ச்சை பல நூற்றாண்டுகளாக நீடிக்கிறது. இது தொடர்பாக  35-ஏ என்ன சொல்கிறது?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 35-ஏ காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகள் வழங்கியுள்ளன. அதன்படி, காஷ்மீர் மாநில மக்களே அங்கு நிரந்தர குடிகள். எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் எந்தவொரு அசையா சொத்தையும் வாங்க முடியாது; மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடைய முடியாது.
35-ஏ இந்த பிரிவின் கீழ் யாரெல்லாம் அடங்குவர்? இந்த சட்டப்பிரிவு அமலுக்கு வந்த நாளான மே 14, 1954 முதல் இருந்து அங்கு யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள். மேலும், அப்போதில் இருந்து 10 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிகளாக கருதப்படுவார்கள்.
இதன் வரலாறு என்ன? பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மக்கள் காஷ்மீருக்குள் உட்புகுவதை தடுக்க, அப்போதைய காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் 1927ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வருகிறார். காஷ்மீர் இந்துக்களின் வற்புறுத்தலால் அவர் இதனை செய்தார் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் சில பகுதிகளில் இன்றும் இந்த சட்டம் இருக்கிறது.
இந்தியாவில் தற்போது இருக்கும் சட்டம் 1954ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் இன்னொரு அரசமைப்புச் சட்ட உறுப்புரை 370 அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பு, தனி கொடி ஆகியவற்றை அனுமதிக்கிறது. தகவல்தொடர்பு, வெளியுறவு தவிர பிற விஷயங்களில் அவர்கள் சுதந்திரமாக செயல்பட இந்தப்பிரிவு வழிவகை செய்கிறது.
35-ஏ இதன் முக்கியத்துவம் என்ன? ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்துவமான மக்கள் தொகை தன்மையினை இது பாதுகாக்கிறது.
இந்தியாவில் அம்மாநிலம் மட்டுமே முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மாநிலம் என்பதால், இந்துக்கள் அங்கு குடியேறுவதை இந்து தேசியவாத குழுக்கள் ஊக்குவிக்கலாம் என்று காஷ்மீர் மக்கள் கருதுகின்றனர். இந்தியாவுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் இடையெ எப்போதும் கொந்தளிப்பான சூழலே நிலவி வருகிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo