Onetamil News Logo

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: நடவடிக்கை எடுக்க கனிமொழி கோரிக்கை!     

Onetamil News
 

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: நடவடிக்கை எடுக்க கனிமொழி கோரிக்கை!       


டெல்லி 2019 டிசம்பர் 12 ; தமிழகத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் ஒரு கும்பல் பணமோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்   திமுக மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. டிசம்பர் 12 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையின்  ’ஜீரோ ஹவர்’ நேரத்தில்  வலியுறுத்தியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசிய அவர், “ அண்மையில் தமிழகத்தில் வேலைவாய்ப்புத் தேர்வுகளில் ஊழல் நடந்த செய்தியும், அதில் பிரதமர் அலுவலகம் தலையிட்ட  செய்தியும்  வெளியானது.  இப்போது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் குறிவைத்து ஒரு மோசடி கும்பல் புறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஒரு லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இந்நிலையில்,  தமிழகத்தின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் இளைஞர்களையும், கல்லூரிகளை மாணவர்களையும் குறிவைத்து ஒரு கும்பல் சென்று, ‘நாங்கள்  முக்கியமான நிறுவனங்களில் இருந்து வருகிறோம். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரப் போகிறோம்’ என்று  சொல்லி  குறிப்பிட்ட அளவு பணத்தை டெபாசிட்டாக ஒரு வங்கிக் கணக்கில் கட்டச் சொல்லுகிறார்கள். ஓய்வு பெற்றவர்களுக்கு கூட சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக அவர்கள் சொல்லி டெபாட்சிட் வசூலிக்கிறார்கள்.
இளைஞர்கள் ஏற்கனவே  வேலைவாய்ப்பின்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் தங்களின் கல்விக் கடனையே திருப்பிச் செலுத்த முடியாத நிலை இருக்கிறது. அவர்களின் குடும்பங்கள் நிதிச் சுமையில் இருக்கின்றன.  இந்த நிலையில் இப்படிப்பட்ட மோசடி கும்பல் வேலைவாய்ப்பு என்ற பெயரில் இளைஞர்களிடம் பணம் பறிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். போலீஸ் துறையில் கூட வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக அவர்கள் வசூலில் ஈடுபட்டுள்ளனர். செய்தித் தாள்களிலும் விளம்பரம் கொடுத்துள்ளார்கள்.  இவர்களுக்குப் பின்னால் பெரிய நெட்வொர்க் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் பார்த்துக் கொண்டிருக்காமல்,  இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும்” என்று  வலியுறுத்தினார் கனிமொழி எம்.பி.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo