Onetamil News Logo

கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் 30ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 27 பேர் பலி ;86 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் 

Onetamil News
 

கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் 30ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 27 பேர் பலி ;86 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் 


புதுடெல்லி: 2020 மார்ச் 30 :கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் 27 பேர் பலியானார்கள்.
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகத்துக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு 199 நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.  இதுவரை 6 லட்சத்து 83 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  அவர்களில், 1 லட்சத்து 46 ஆயிரத்து 396 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  ஒரே நாளில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 457 ஆக உள்ளது.உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக உயர்ந்து உள்ளது.   

மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கணக்கை நாள்தோறும் பெருக்கி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 979 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  86 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளது. நாட்டில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த ஒரே வாரத்தில் 400 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo