Onetamil News Logo

பிரதமராக மோடி மீண்டும் தேர்வு ;ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்பு 

Onetamil News
 

பிரதமராக மோடி மீண்டும் தேர்வு ;ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்பு 


டெல்லி  2019 மே 26 ; நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதை தொடர்ந்து டெல்லியில் நேற்று நடந்த பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமராக மோடி மீண்டும் தேர்வு ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.17-வது நாடாளுமன்றத்தை தேர்ந் தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து உள்ளது.
மொத்தம் 543 உறுப்பினர் களை கொண்ட மக்களவைக்கு, தேர்தல் நடத்தப்பட்ட 542 இடங்களில் இந்த கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. இதில் பா.ஜனதா மட்டுமே 303 இடங் களை பிடித்து இருக்கிறது.
தற்போதைய 16-வது மக்களவையின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து அதற்கு முன் புதிய அரசு அமைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே புதிய அரசை அமைக்கும் பணிகளில் பா.ஜனதா இறங்கி உள்ளது. அதன் ஒருபகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நேற்று மாலையில் நடந்தது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர் கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் (பிரதமர்), தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் மோடி முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
இதில் பா.ஜனதா நாடாளுமன்ற குழு தலைவராக மோடியின் பெயரை கட்சித்தலைவர் அமித்ஷா முன்மொழிய, அதை மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோர் வழிமொழிந்தனர்.
இதைப்போல நரேந்திர மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக, சிரோமணி அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் முன்மொழிந்தார். இதை ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தலை வர்கள் வழிமொழிந்தனர்.
அப்போது பேசிய பா.ஜனதா தலைவர் அமித்ஷா, ‘353 எம்.பி.க்கள் அடங்கிய நாடாளுமன்றக்குழுவுக்கு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்’ எனக் கூறினார். உடனே அரங்கில் இருந்த எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சித்தலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
புதிய பிரதமராக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மோடிக்கு எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது உணர்ச்சி மயமாக காணப்பட்ட பிரதமர் மோடி, அனைவரின் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். மேலும் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோரின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சித்தலைவர் ஜி.கே.மணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தே.மு.தி.க. இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்குப்பின் பா.ஜனதா தலைவர் அமித்ஷா தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார்.
அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து நாடாளுமன்ற குழு தலைவராக (பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அவரிடம் வழங்கினார். அத்துடன் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவு கடிதங்களையும் வழங்கினார்.
அதன்பிறகு மோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, புதிய அரசு அமைக்க தனக்கு அழைப்பு விடுக்குமாறு உரிமை கோரினார்.
இதைத்தொடர்ந்து, மோடியை புதிய பிரதமராக நியமித்த ஜனாதிபதி, புதிய ஆட்சி அமைக்க அவருக்கு அழைப்பு விடுத்ததோடு மந்திரிகள் பட்டியல் மற்றும் பதவி ஏற்கும் நாள், நேரம் ஆகியவற்றை முடிவு செய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, மோடி மீண்டும் பிரதமராக இந்த வாரம் பதவி ஏற்க இருக்கிறார்.
ஜனாதிபதியை சந்தித்து விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், தன்னை புதிய பிரதமராக ஜனாதிபதி நியமித்திருப்ப தாகவும், மத்தியில் புதிய அரசை அமைக்குமாறு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன், உலகில் இந்தியாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும், மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய புதிய அரசு பாடுபடும் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் அசோக் லாவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது நாடாளுமன்ற தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலை அவரிடம் வழங்கினர்.
முன்னதாக 16-வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் நேற்றுமுன்தினம் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 16-வது மக்களவையை கலைத்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo