Onetamil News Logo

முகம் முழுவதும் இரத்தம் வழியும் இந்திய விமானி அபிநந்தன்

Onetamil News
 

முகம் முழுவதும் இரத்தம் வழியும் இந்திய விமானி அபிநந்தன்டெல்லி  2019 மார்ச் 1  ;பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான் சென்னையை சேர்ந்தர் ,இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது.அவரது சீருடையில் ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தனது சர்வீஸ் எண்ணை கூறுவது போல அந்த காட்சியில் உள்ளது. கைது செய்யப்பட்ட அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேசுவது போல ஒரு காணொளியும் வெளியாகியது.
அதில் அந்த நபர், ஒரு கும்பலிடமிருந்து பாகிஸ்தான் ராணுவம் தன்னை மீட்டதாகக் கூறுகிறார்.இந்த காட்சியின் உண்மைதன்மை குறித்து பிபிசி பரிசீலித்து உறுதி செய்யவில்லை.அந்த காணொளியில் என்ன உள்ளது என்பதை மட்டும் இங்கே வழங்குகிறோம்.அந்த காட்சியில் சாதாரண உடையில் தேநீர் கோப்பையுடன் அபிநந்தன் உள்ளார்.
தன்னை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாக கூறுகிறார்.அவரிடம் அவரது இருப்பிடம் குறித்தும், ராணுவ இலக்கு குறித்தும் கேட்கிறார்கள்.இதற்கு பதிலளிக்கும் அவர், "என் இருப்பிடத்தைக் கூற எனக்கு அனுமதியில்லை. இந்தியாவின் தென் பகுதியை சேர்ந்தவன் தான் என்றும், இலக்கு குறித்து தாம் கூறமுடியாது" என்கிறார்.இந்த சூழலில் பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார். அதில் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒரே ஒரு இந்திய விமானி மட்டுமே உள்ளதாகவும், ராணுவ நடைமுறைகளின்படி அவர் நடத்தப்படுவதாகவும் பகிர்ந்துள்ளார்.
நாட்டுப்பற்றின் காரணமாகவோ, எந்த தகவலையும் முன்கூட்டி சொல்வதாக நினைப்பதாலோ, நாட்டுநடப்பு அனைத்தும் அத்துப்படி என காட்டிக்கொள்வதற்காகவோ அல்லது உண்மையிலேயே அபிநந்தன் மீது கொண்ட அக்கறையினாலோ, கரிசனத்தினாலோ, இன்னபிற எந்தவொரு காரணத்தினாலோ அவரது இரத்தம் தோய்ந்த முகத்தை நாம் தொடர்ந்து பதிவேற்றிக்கொண்டிருக்கிறோம். இந்தப்பதிவுகளை ஒவ்வொருமுறையும் கடந்து சொல்லும்போது அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எவ்வளவு தீராத மனவேதனையை இந்தப் புகைப்படம் விட்டுச்சொல்லும் என நாம் ஏன் யோசிக்க தவறுகிறோம்?
இந்தப்புகைப்படம், இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் தகாத முறையில் நடத்தப்பட்டாரோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துவதோடு, அண்டை நாட்டின் மீதான மரியாதையை அழித்து, அவர்கள் மீது வன்மம் கொண்ட பார்வையை உருவாக்கும் காரணியாகவும் செயல்பட வாய்ப்பிருக்கிறது. அவருக்கு பாகிஸ்தான் ராணுவம் முதலுதவி அளித்துப் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு, அவரை மரியாதையுடன் நடத்துவதாகவும் அபிநந்தனே பேசிய காணொளி ஒன்றும் வெளியாகி இருக்கும் நிலையில், அவர் புத்துணர்ச்சியுடன் தேனீர் அருந்தியவாறே பேசிக்கொண்டிருக்கும் காட்சிகள் அனைவருக்கும் மனதைரியத்தை உண்டாக்கக்கூடியதாய் இருக்கின்றது. அபிநந்தனின் புகைப்படத்தைப் பதிவேற்றுவதில் தவறில்லை. அதேவேளையில் அந்த புகைப்படத்தால் மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உரிமை நமக்குக் கிடையாது என்கிற புரிதலே இங்கு தேவைப்படுகிறது.
போர் எப்போதும் மக்களுக்கானது அல்ல. போரால் மீண்டும் ஒரு போர் நிகழுமே தவிர அமைதியை உண்டாக்குவதற்கான சாத்தியமும் அதுவல்ல. நமது ராணுவ வீரர்களின் இறப்புக்கு பழி தீர்க்க நாம் புறப்பட்டால், முதலில் அஜாக்கிரதையாக இருந்து, அத்தகைய விபத்து நேரிட ஒருவகையில் காரணமாய் இருந்ததும் நாம் தானே. தவறு இவ்வகையில் இருபுறமும் இருக்க, சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை தானே நியாமானதாக அமைய முடியும்? 
வரலாற்றில் போர்களைப் பற்றிய பாடங்களை விளக்கிக் கூறிவிட்டு, ஒரு வரலாறு ஆசிரியராய் அதன் பயங்கரத்தை உணர்ந்தவராய், 'நம் வாழ்நாளில் இன்னும் ஒரு உலகப்போரை சந்திக்காத தலைமுறையாய் நாம் வாழ்ந்து முடித்தால் போதும்' என என் அம்மா அடிக்கடி கூறுவார். அவரது மிரட்சி இப்போது என் மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது.  அமைதியையும், அன்பையும் தாண்டி வென்ற போர்கள் நம் சரித்திரத்தில் இல்லை. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo