Onetamil News Logo

கஷ்மீரை சேர்ந்த ஏர் கமோடர் ஹிலால் அஹமது ராத்தர், ரஃபேலில் பறந்த முதல் இந்திய போர் விமானி !! 

Onetamil News
 

கஷ்மீரை சேர்ந்த ஏர் கமோடர் ஹிலால் அஹமது ராத்தர், ரஃபேலில் பறந்த முதல் இந்திய போர் விமானி !! 


டெல்லி ஜூலை.31 ; தெற்கு காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டத்தில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் ஏர் கமோடர் ஹிலால் அஹமது ராத்தர்.இவரது தந்தை காவல்துறை அதிகாரி ஆவர்,இவருடன் மூன்று சகோதரிகள் உண்டு. தனது பள்ளி கல்வியை நக்ரோதாவில் உள்ள ராணுவ பள்ளியில் முடித்தார்.பின்னர் பூனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார், சிறப்பாக செயல்பட்டமைக்கு வீரவாளை பரிசாக பெற்றார். பின்னர் இந்திய விமானப்படை அகாடமிக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு சிறப்பாக பயிற்சி முடித்து டிசம்பர் 17, 1988ஆம் ஆண்டு போர் விமானியாக படையில் இணைந்தார், 1993ஆம் ஆண்டு ஃப்ளைட் லெஃப்டினன்ட் ஆகவும், 1999ஆம் ஆண்டு ஸ்க்வாட்ரன் லீடர் ஆகவும் பதவி உயர்வு பெற்றார்.இவர் ஃப்ரான்ஸ் நாட்டில் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுகையில் ரஃபேல் ஒப்பந்தத்தில் மிக முக்கிய பங்காற்றினார்,குறிப்பாக ரஃபேல் விமானத்திற்கு தேவையான ஆயுதங்களை தேர்வு செய்ததில் மிக முக்கிய பங்காற்றினார், அதை போலவே ரஃபேல் விமானத்தை இயக்கிய முதல் இந்திய போர் விமானியும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo