Onetamil News Logo

பாலியல் புகார் வழக்கில் எம்.பி.சசிகலா புஷ்பாவை விடுவிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Onetamil News
 

பாலியல் புகார் வழக்கில் எம்.பி.சசிகலா புஷ்பாவை விடுவிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.



டெல்லி  2019 மே 8 ; பணிப்பெண்களுக்கு பாலியல்  தொந்தரவு அளித்த விவகாரத்தில் சசிகலா புஷ்பாவை வழக்கிலிருந்து விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 தூத்துக்குடியில் உள்ள சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா, சசிகலாபுஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் தொல்லை தொடர்பாக சசிகலா புஷ்பாவிடம் தெரிவித்தபோது அவர் தங்களை அடித்து, உதைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்களான ஜான்சிராணி, பானுமதி ஆகியோர் தங்களது புகாரில் தெரிவித்தனர்.
 பணிப்பெண்கள் புகார் அளித்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க, சசிகலா புஷ்பா உட்பட மூவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகி  முன் ஜாமீன் கோரினர். ஆனால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. மேலும், வக்காலத்தில் போலி கையெழுத்து இட்டதாக சசிகலா புஷ்பா மீது தனியாக பதியப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சசிகலா புஷ்பா மீதான வழக்கில் புகார் செய்த பெண்கள் அந்தப் பாலியல் புகாரை திரும்பப் பெற்றனர். இருப்பினும், சசிகலா புஷ்பா உள்ளிட்டோரின் மீது பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
 நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்கக் கோரியும், முன் ஜாமீன் கோரியும்  சசிகலா புஷ்பா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது நடைபெற்ற விசாரணையில் உச்ச நீதிமன்றம், சசிகலா புஷ்பாவைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது. வழக்கில் ஆஜராகிய எதிர் தரப்பில் சசிகலா புஷ்பா வக்காலத்தில் இடப்பட்ட கையெழுத்து போலியானது என புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்தக் கையெழுத்து தன்னுடையதுதான். எனவே தன் மீது மதுரையில் பதியப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் என்று சசிகலா புஷ்பா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
 வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, அப்துல் நசீர் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.  பாலியல் வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கைச் சந்திக்க உத்தரவிட்டது. பாலியல் வழக்கு முடியும் வரை சசிகலா புஷ்பாவைக் கைது செய்யவும் தடைவிதித்தது. வக்காலத்தில் போலிக் கையெழுத்து போட்டதாகக் கூறி மதுரையில் போடப்பட்ட எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர் சுகந்தியைத் தாக்கியது தொடர்பான வழக்கையும் சசிகலா புஷ்பா சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo