Onetamil News Logo

நேர்மையானவர்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி  பொன்மாணிக்கவேல் இவரது பணி நீட்டிப்புக்கு எதிராக 66 போலீஸ் அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு 

Onetamil News
 

நேர்மையானவர்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி  பொன்மாணிக்கவேல் இவரது பணி நீட்டிப்புக்கு எதிராக 66 போலீஸ் அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு 


புதுடெல்லி,  2019 ஜனவரி 28 ; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு எதிராக 66 போலீஸ் அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கடந்த நவம்பர் 30-ந் தேதியுடன் ஓய்வு பெற்றார். ஆனால் அவரை மேலும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை ஐகோர்ட்டு பணி நீட்டிப்பு வழங்கியது.
இதை எதிர்த்து தமிழக போலீஸ் அதிகாரிகள் 66 பேர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அவர்கள் சார்பில் வக்கீல் மயில்சாமி இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த மனுக் கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.இதில் விசாரணை துவங்கியதும் வழக்கின் எதிர்மனுதாரர்களில் ஒருவரான டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வக்கீல் ஜி.எஸ்.மணி, பதில் மனு தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரினார். இதை கடுமையாக எதிர்த்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இதனால் வழக்கு தாமதப்படுத்தப்படும் என்றும் இன்று (நேற்று) தங்கள் தரப்பு வாதங் களை கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.பின்னர் தனது வாதங்களை எடுத்து வைத்து அவர் கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட அதிகாரி கடந்த நவம்பர் 30-ந் தேதியுடன் பணி ஓய்வு பெற்றுவிட்டார். அவருடைய இடத்தில் புதிய அதிகாரியை மாநில அரசு நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அந்த இடத்தில் வேறு அதிகாரியை நியமிக்கும்பட்சத்தில் பொன்மாணிக்கவேல் அங்கு பணியாற்ற முடியாது. ஓய்வு பெற்ற அதிகாரியை ஐகோர்ட்டு மீண்டும் பணியில் அமர்த்த முடியாது’ என்று கூறினார்.
அப்போது மற்றொரு எதிர் மனுதாரரான யானை ராஜேந்திரன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா தனது வாதத்தில், ‘இதுபோன்ற நியமனங்களை கோர்ட்டு செய்யலாம். இந்த அதிகாரி (பொன்மாணிக்கவேல்) மிகவும் திறமையான முறையில் விசாரணை நடத்தி வந்தார். அந்த விசாரணையை முடக்குவதற்கு மாநில அரசு பலவகைகளிலும் முயற்சி செய்தது. ஆனால் அவரை சிறப்பு அதிகாரியாக ஐகோர்ட்டு நியமித்து உள்ளது’ என்று வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ‘அவருடைய (பொன்மாணிக்கவேல்) விசாரணையில் அவர் கண்டுபிடித்ததாக கூறப்படுவது எல்லாம் முற்றிலும் தவறானவை. 166 வழக்குகள் பற்றி சி.பி.ஐ. தகவல் கேட்டுள்ளது. ஆனால் இந்த அதிகாரி அந்த தகவல் களை பகிர்ந்து கொள்ள மறுக்கிறார்’ என்று குற்றம் சாட்டினார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ஓய்வு பெற்ற அதிகாரியை மீண்டும் நியமிக்கும் அதிகாரம் கோர்ட்டுக்கு உண்டா? என்பது பற்றி முதலில் விரிவாக நாம் விசாரிக்க வேண்டும். இந்த வழக்கு பிப்ரவரி 19-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு முன் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக் கால மனுவின் மீது எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மூல மனுவின் மீதும் பதில் மனு தாக்கல் செய்யாதவர்களும் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo