Onetamil News Logo

இந்திய போக்குவரத்து கட்டமைப்பை முற்றாக தனியார் கார்ப்பரேட் மயமாக மாற்றுவதற்கு முனையும் இந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 7 அன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம்;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் கண்டனம் 

Onetamil News
 

இந்திய போக்குவரத்து கட்டமைப்பை முற்றாக தனியார் கார்ப்பரேட் மயமாக மாற்றுவதற்கு முனையும் இந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 7 அன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம்;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் கண்டனம் 



புதுதில்லி,  2018 வெள்ளி ஜூலை 27 ; மோடி அரசு கொண்டுவரும் மோட்டார் வாகனங்கள் திருத்தச் சட்ட மசோதா ஒட்டுமொத்த நாட்டின் போக்குவரத்து கட்டமைப்பையும் பெரும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கிற மிகப்பெரும் சூழ்ச்சியின் துவக்கமே என்று நாடாளுமன்றத்தில் டி.கே.ரங்கராஜன் கண்டனம் தெரிவித்தார்.மாநிலங்களவையில் திங்களன்று மோட்டார் வாகனங்கள் திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்தது.இந்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலங்களவைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் ஆற்றிய உரை வருமாறு:மோட்டார் வாகனங்கள் திருத்தச் சட்ட மசோதா 2017ஐ எமது கட்சியின் சார்பில்கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்கிறோம்.பல்வேறு காரணங்களுக்காக இந்த எதிர்ப்பினை பதிவு செய்கிறோம். இந்த மசோதாவின்படி, சாலை விபத்து ஏற்பட்டால் அதற்கு ஓட்டுநரும், நடத்துநரும் மட்டுமே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. அதை ஏற்க முடியாது. விபத்து என்பதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பல்ல, விபத்து ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சாலைகள் ஒழுங்காக இல்லாமை, சாலையில் நெருக்கடிகள், நெரிசல்கள், வாகன போக்கு வரத்து பெருக்கத்திற்கு ஏற்ற வகையிலான சாலையாக இல்லாத நிலைமை எனப் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்ட முடியும்.இந்த முக்கியமான அம்சங்களைப் பற்றி மோட்டார் வாகனங்கள் திருத்தச் சட்ட மசோதா அப்பட்டமாக மவுனம் காக்கிறது. இப்போது சாலைகளைப் பற்றி பேசுகிறோம். நாட்டில் தொடர்ச்சியாக ரயில் விபத்துக்கள் நடக்கின்றனவே, ஏன் ரயில் விபத்துக்களை நம்மால் தடுக்க முடியவில்லை? ரயில் பாதைகள் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் சரியாகவே இருக்கும்போது, அதையே தடுக்கமுடியவில்லை என்கிற நிலையில், சாலைகளில் ஓடுகிற வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதை, இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தடுத்துவிடுவோம் என்று அரசு சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது.இப்படியொரு ஒரு மசோதாவைக் கொண்டுவருவதற்கு காரணமே சாலைகளை ஒழுங் காற்று செய்கிற பொறுப்பை தனியாரிடம் கொடுக்கிற அரசாங்கத்தின் முனைப்பே தவிர வேறல்ல. ஒற்றைச் சாளர முறையின் கீழ் அனைத்தையும் கொண்டுவருவதாகக் கூறி வாகனங் களை பதிவு செய்கிற நடைமுறை உள்ளிட்டஅனைத்தையும் தங்களது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியாகவே மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த நடைமுறைகள் எதிலும் இனிமேல் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்கப் போவதில்லை. மோட்டார் வாகனங்களை கையாளுகிற ஒட்டுமொத்த அதிகாரமும் மாநில அரசிடமிருந்து பறிக்கப்பட்டு, மத்திய அரசின் கைகளின் குவிக்கப்படுவதற்கே இந்தமசோதா வழிசெய்யும். இதைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த விசயத்தில் இனிமேல் மாநில அரசு என்பது ஒரு கிராமபஞ்சாயத்து அளவிற்குத்தான் செயல்படும்.இன்றைக்கு இந்தியாவில் கிராமப்பஞ்சா யத்திடம் என்ன அதிகாரம் இருக்கிறது? எந்த அதிகாரமும் இல்லை.மற்றொரு முக்கியமான பிரச்சனை, அனைத்து மாநிலங்களிலும் மாநில அரசின் போக்குவரத்துத்துறை இயங்கிக் கொண்டி ருக்கிறது. அது ஒவ்வொரு மாநிலத்திலும் மிக முக்கியமானப் பங்கினை ஆற்றி வருகிறது. தற்போது அரசு ஆலோசித்து வரும் மோட்டார்வாகன திருத்தச்சட்டமானது, மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கே ஆபத்தான அம்சங்களை கொண்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நாடு முழுவதும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஓரளவுக்கு இலகுவான கட்டணத்தில் போக்குவரத்து வசதியை அளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அரசு முன்மொழியும்சட்டத்திருத்தங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மிகப்பெரிய அளவிற்கு சீர்குலைவை நோக்கி உந்தித் தள்ளும்.தமிழகத்தில், கேரளத்தில் அரசுப்போக்கு வரத்துக் கழகங்கள் மாணவர்களுக்கும், முதியவர்களுக்கும் இலவச பேருந்து சேவை யை அளித்து வருகின்றன. தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இலவச போக்குவரத்து வசதிகளை அளித்தார்.அதன் அடிப்படை நோக்கமானது கிராமங் களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான போக்குவரத்து வசதியை எளிதாக்க வேண்டும் என்பதுதான். அடிப்படையில் அரசு போக்குவரத்து என்பது லாப நோக்கம் கொண்டதாக இருக்கக்கூடாது என்ற சிந்தனைதான் இதன் பின்னால் இருக்கிறது. ஆனால் தற்போதைய மத்திய அரசு முன்மொழியும் மசோதாவானது இவை அனைத்தையும் சீர்குலைக்கும்.இதை நியாயப்படுத்துவதற்கு மத்திய அரசு, என்ன சொல்கிறது என்றால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. எனவே இந்த சேவைகளை ரத்து செய்ய வேண்டும் என்கிறது.
அரசுப் போக்குவரத்து என்பது முற்றிலும் சேவைத்துறை யாகும். அது நட்டத்தில் செயல்படுகிறது என்று காரணம் சொல்ல முடியாது. அரசு பொது மருத்துவமனைகள் வைத்திருக்கிறோம். பொது மருத்துவமனைகளில் எந்த லாபமும் இருக்காது என்பது தான் உண்மை. அது நட்டத்தில் தான் இயங்குகிறது. காவல் நிலையங்கள் வைத்திருக்கிறோம். அது லாபத்தில் இயங்காது, நட்டத்தில்தான் இயங்கும். நீதித்துறை வைத்திருக்கிறோம், நீதிமன்றங்கள் லாபம் பார்க்க முடியாது, நட்டத்தில்தான் இயங்கும். அப்படியானால் அனைத்தையும் நீங்கள் தனியாருக்கு விற்றுவிடுவீர்களா? எனவே உங்களது கருத்து முற்றிலும் மோசடித்தனமானது; அநீதியானது.இந்த மசோதா அரசு போக்குவரத்துக் கழகங்களை மட்டுமல்ல. நாடு முழுவதும் உள்ள சிறிய அளவிலான தனியார் போக்குவரத்து நிறுவனங்களையும் மிகக்கடுமையான சீர்குலைவுக்கு உள்ளாக்கும். இந்த மசோதாவின் நோக்கம் என்னவென்றால், அரசு போக்குவரத்தை முற்றாக சீர்குலைத்து அந்த வாய்ப்புகள் அனைத்தையும் மிகப்பெரும் தனியார் கார்ப்பரேட் போக்குவரத்து நிறுவனங்களிடம் ஒப்படைப்பதுதான், நாடு முழுவதும் எண்ணற்ற சிறு தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் - இரண்டு பேருந்துகள், மூன்று பேருந்துகள், ஐந்து பேருந்துகள் என வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களையும் ஒட்டுமொத்தமாக ஒழித்து, அனைத்து போக்கு வரத்து கட்டமைப்பையும் பெரும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பதுதான் இந்த மசோதா வின் நோக்கம். எனவே இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இந்த மசோதா, மோட்டார் வாகனங்களை ஒழுங்காற்று செய்கிற மாநில அரசுகளின் சட்ட நடைமுறைகளை, விதிமுறைகளை முற்றாகப் பறிக்கிறது. மாநிலங்களில் போக்குவரத்து வாகனங்களை கண்காணிப்பது, அது சார்ந்த பதிவுகள், புதுப்பித்தல், லைசென்ஸ் பெறு வது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் சார்ந்த மாநிலங்களின் வருவாயையும் தடுத்து நிறுத்துகிறது. மொத்தத்தில், போக்குவரத்து தொடர்பான மாநில அரசுகளின் உரிமையை முற்றாகப் பறிக்கிறது.
வாகனங்களை பதிவு செய்யும் தற்போதைய நடைமுறையை கைவிட்டு, வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் டீலர்களே அந்த வேலையை செய்துவிட வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது. இது அப்பட்டமான ஊழல் நடைமுறைகளுக்கே வித்திடும்.அந்த சம்பந்தப்பட்ட நிறுவனம் மாநில அரசுக்குசெலுத்த வேண்டிய வரி உள்ளிட்டவற்றை செலுத்தாமல் ஏமாற்றுவதற்கும் இது வழிவகுக்கும்.எனவே ஒட்டுமொத்தத்தில் இந்திய போக்குவரத்து கட்டமைப்பை முற்றாக தனியார் கார்ப்பரேட் மயமாக மாற்றுவதற்கு முனையும் இந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி ஆகஸ்ட் 7 அன்று நாடு முழுவதும் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. எனவே இந்த மசோதாவை கைவிடவேண்டுமென்று மத்திய அரசாங்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். ஓட்டுநர்களை, நடத்துநர்களை, போக்குவரத்துக்கழகங்களை, சின்னஞ்சிறிய தனியார் போக்குவரத்து நிறுவனங்களை, இவற்றையெல்லாம் நம்பியிருக்கும் கோடிக்கணக்கான ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை - போக்குவரத்து துறையைச்சீர்குலைத்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்திட வேண்டாம் என்று மத்திய அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo