Onetamil News Logo

கலைஞரின்  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொள்க!-  மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி ஆலோசனை!

Onetamil News
 

கலைஞரின்  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை முன்மாதிரியாகக் கொள்க!-  மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி ஆலோசனை!


                                                
தூத்துக்குடி 2019 டிசம்பர் 4 ;தமிழ்நாட்டில் திமுக ஆட்சி காலத்தில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தை பின்பற்றி மத்திய அரசின் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை  செம்மைப்படுத்துமாறு கனிமொழி எம்பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி டிசம்பர் 4ஆம் தேதி மக்களவையில் பேசும்போது...
 “மத்திய அரசு சார்பில் மகப்பேறு பெண்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி திட்டம் முதலில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருந்தது. பிறகு அது பிரதம மந்திரி மகப்பேறு  நிதி உதவித் திட்டமாக மாற்றப்பட்டது.. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இருந்த வரையில் 2013 ஆம் ஆண்டு மகப்பேறு நிதியுதவித் தொகை 6 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அதன்பின் பிரதம மந்திரி மகப்பேறு நிதியுதவித் திட்டமாக மாற்றப்பட்ட பின் வழங்கப்படும் நிதி உதவி 5000 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் முதல் குழந்தை பெறுதலுக்கு மட்டுமே நிதி உதவி என்று திட்டத்தின் வரம்பும் சுருக்கப்பட்டு விட்டது.
2017- 18 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக 2,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் 2018- 19 பட்ஜெட்டில் மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கான தொகை 1,200 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நிதி ஆண்டில் இத்திட்டத்தை  முழுமையாக செயல்படுத்த தேவையான மொத்த தொகை 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.
6 வட இந்திய மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி பெற்ற தரவுகளின் படி பிரதம மந்திரி மகப்பேறு நிதி உதவித் திட்டம் ஒட்டுமொத்த பயனாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினரையே  சென்று சேர்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான விண்ணப்ப முறையும் பெரும் சிக்கலாக இருக்கிறது. 23 பக்கங்கள் கொண்ட விண்ணப்பத்தோடு குறிப்பிட்ட பெண்ணின் ஆதார் கார்டு, கணவரின் ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், ஆதார் கார்டு எண் வங்கி கணக்கு இணைக்கப்பட்ட ஆவணம், திருமண சான்று என ஏகப்பட்ட ஆவணங்களும் கேட்கப்படுகின்றன.  இதனாலேயே இந்தத் திட்டம் பயனாளிகளுக்கு உகந்ததாக கருதப்படவில்லை. எனவே இத்திட்டத்தின் பொறிமுறைகளை  பயனாளிகளுக்கு உகந்த திட்டமாக மாற்றியமைக்க வேண்டும்.  இதற்கு  தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர்  அறிமுகப்படுத்திய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் மிகச் சிறந்த வெற்றிகரமான முன் மாதிரியாக இருக்கிறது. இத்திட்டத்தின்படி  முதல் இரு  பிரசவங்களுக்கு தலா 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.   இத்திட்டத்தைப் பின்பற்றி பிரதமர் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை பயனாளிகளுக்கு உகந்த திட்டமாக மாற்றியமைக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் கனிமொழி எம்.பி.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo