Onetamil News Logo

சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு;  எதிர்கட்சியை சேர்ந்த நபரை சந்தித்ததை பொதுவெளியில் இருந்து மறைக்க விரும்புவது பொதுநலனாக கருத முடியாது.

Onetamil News
 

சசிகலா புஷ்பாவுக்கு ரூ.4லட்சம் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு;  எதிர்கட்சியை சேர்ந்த நபரை சந்தித்ததை பொதுவெளியில் இருந்து மறைக்க விரும்புவது பொதுநலனாக கருத முடியாது.


டெல்லி 2020 ஜூன் 4 ; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தமிழக எம்.பி. சசிகலா புஷ்பாவின் மரியாதையை குலைக்கும் வகையி்ல் அடையாளம் தெரியாத சிலர் பதிவேற்றம் செய்துள்ள தரக்குறைவான வீடியோக்கள், மார்பிங் புகைப்படங்களை நீக்க வேண்டும் என்று சித்தரிக்கப்பட்ட தனது புகைப்படங்களை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என்ற சசிகலா புஷ்பாவின் மனு மீது டெல்லி நீதிமன்றம் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளது. மூடிய கதவுகளுக்கு பின் நடக்கும் சந்திப்புகளை அறிய மக்களுக்கு உரிமை உண்டு என்று டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தன்னை அவதூறாகவும், தவறாக சித்தரித்து இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை  நீக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில்  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சசிகலா புஷ்பா கடந்த 2016-ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
சசிகலா புஷ்பா தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் பவூக் சவுகான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: அதிமுக தலைவர் தன்னை கன்னத்தில் அறைந்தால், உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் சசிகலா புஷ்பா புகார் அளித்தார். இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார்.இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு சசிகலா தனது வீட்டில் வேலை செய்த இரு பெண்களை பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாக்கினார் என்ற போலியான புகார் தரப்பட்டு, அவரின் குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர். அதன்பின் இந்த கைது நடவடிக்கையில் இருந்து உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் சசிகலா புஷ்பா நிவாரனம் பெற்றார். 
மேலும் திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த செயல்களால் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே காலதாமதமின்றி உடனடியாக அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். 
இந்த மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜிவ் சஹாய் என்ட்லா, "இந்த வழக்கில் மனுதாரரின் அந்தரங்க உரிமையும், அவர் யாரை சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள பொது மக்களுக்கு உள்ள உரிமையையும் சமன்படுத்தி பார்க்க வேண்டியுள்ளது.எனவே அந்த வகையில் சசிகலா புஷ்பா ஒரு மக்கள் பிரதிநிதி, மேலும் தன் கட்சியை சாராத,  கணவருமல்லாத எதிர்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவரை மூடிய கதவுகளுக்கு பின்னால் சந்தித்து பழகியதை அறிந்து கொள்ளும் உரிமை அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு. எதிர்கட்சியை சேர்ந்த நபரை சந்தித்ததை பொதுவெளியில் இருந்து மறைக்க விரும்புவது பொதுநலனாக கருத முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் சசிகலா புஷ்பா தரப்பு வாதத்தின் போது, எதிர்கட்சி நபருடனான அந்த சந்திப்புகள் பொதுநலனுக்கான சந்திப்பு என்பதை எடுத்து வைக்கவும் இல்லை, சந்திப்புகளை மறைத்திட வேண்டும் எனவும் வாதிடவில்லை.
மேலும்,  இந்த வழக்கில் மனுதாரர் கோரிய நிவாரணத்தை அளிக்க  எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே மனுதாரர் தொடர்புடைய புகைப்படங்களை நீக்கவோ, அவற்றை பார்ப்பதிலிருந்து கட்டுப்பாடு விதிக்கவோ பேஸ்புக், கூகுள், யூ டியூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட முடியாது. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதுடன், மனுதாரர் சசிகலா புஷ்பா, பேஸ்புக் நிறுவனத்துக்கு 2 லட்ச ரூபாயும், கூகுள் மற்றும் யு டியூப் நிறுவனங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் வழக்கு  செலவிற்கு அளிக்க வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo