Onetamil News Logo

பாஜக முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம்     

Onetamil News
 

பாஜக முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத்மலானி மரணம்       


டெல்லி  2019 செப் 8 ;ராம் ஜெத்மலானி (95),இவர் செப்டம்பர் 14, 1923,ம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் ஒரு முன்னணி வழக்கறிஞரும் அரசியல்வாதியும் ஆவார்.இந்திய சட்ட அமைச்சராகவும் வழக்கறிஞரவைகளின் தலைவராகவும் பல பதவிகளில் பொறுப்பாற்றியிருக்கிறார். பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் பங்கேற்று விமர்சனங்களை மேற்கொண்டுள்ளார்.
பாக்கித்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள சிக்கார்பூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ராம் ஜெத்மலானி தனது 18 வயதிலே சட்டப் படிப்பை முடித்து, இந்தியப் பிரிவினை வரை தனது சொந்த ஊரிலும் (தற்போதைய பாக்கித்தானில் உள்ளது), பிற்பாடு மும்பையிலும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரத்தனா என்ற மனைவியும் (முதல் மனைவி 1947ல் திருமணம்), துர்க்கா என்ற மனைவியும் (2வது மனைவி) இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களுள் மகேசு மற்றும் இராணி ஆகியோரும் பிரபலமான வழக்கறிஞர்கள் ஆவார்கள்.
மும்பையிலின்று இவர் ஆறாவது மற்றும் ஏழாவது மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார். அடல் பிகாரி வாச்பாயின் அமைச்சரவையில் சட்டத் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2004 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாச்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2010 -ம் ஆண்டு மீண்டும் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்த இவர், மாநிலங்களவைக்கு அக்கட்சியின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்டார்.இந்திய வழக்கறிஞர்களிலேயே மிகக்கூடுதலான ஊதியம் பெறுபவராகவும் இருந்தார்.அவர் இன்று காலமானர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo