Onetamil News Logo

டெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு  

Onetamil News
 

டெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு  



டெல்லி  2019 நவம்பர் 5 ;தேசிய தலைநகரைத் திணற செய்யும் காற்று மாசு தொடர்பாக மத்திய அரசிடமும் டெல்லி அரசிடமும் கடுமையான கேள்விகளை முன் வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
டெல்லியில் காற்று மாசைக் குறைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒரு குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தக் குழு காற்று மாசு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இது தவிர டெல்லி காற்று மாசைக் குறைக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனு நேற்று (நவம்பர் 4) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஷ்ரா, தீபக் குப்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது “விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது குறித்து, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும். பயிர்க் கழிவுகளை எரிப்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகமும், காவல் துறை அதிகாரிகளும் தடுக்க வேண்டும். கனரக வாகனங்கள் டெல்லிக்குள் வருவதை மாசுக் கட்டுப்பாட்டு ஆணையம் தடுக்க வேண்டும்.
டெல்லி மற்றும் என்.சி.ஆரில் (national capital region) கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறினால் உள்ளூர் நிர்வாகத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நிலக்கரி சார்ந்த தொழில்களை தற்போது நிறுத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை டெல்லி என்.சி.ஆரில் டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.காற்று மாசு நெருக்கடியைச் சமாளிக்க மாநில அரசுகள் உயர் மட்டக் குழுவை அமைக்க வேண்டும்” என்று பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர்.
“காற்று மாசால் டெல்லி திணறிக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் அதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது. டெல்லி ஒவ்வோர் ஆண்டும் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. ஆனால் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் இது 10-15 நாட்களுக்கு நடக்கிறது” என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர்.“காற்று மாசால் விலை மதிப்பற்ற தங்கள் வாழ்நாளை மக்கள் இழந்து வருகின்றனர். டெல்லி மாநகரில், வீடுகளுக்கு உள்ளே, ஓர் அறைகூட பாதுகாப்பானதாக இல்லை. இந்தச் சூழலில் மக்கள் உயிர் வாழ முடியுமா? மக்களை இறக்கச் சொல்கிறீர்களா?” என்று கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
“டெல்லிக்கு வர வேண்டாம் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பு? அரசு தேர்தலில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டார்கள். இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று வினவிய நீதிபதிகள் மத்திய மாநில அரசுகள் இணைந்து காற்று மாசைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo