Onetamil News Logo

நாட்டில் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது ;பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் 

Onetamil News
 

நாட்டில் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது ;பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் 


புதுடெல்லி: 2019 பிப்ரவரி 1 ; நாட்டில் தற்போது ரூ.2.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20% வரியும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.
 
சமீப ஆண்டுகளாக வருமான வரிவிலக்கு உச்சவரம்பு உயர்த்தப்படவே இல்லை. வருமான வரி செலுத்துகிற சம்பளதாரர்களை ஈர்க்கிற விதத்தில் தற்போதைய வருமான வரிவிலக்கு உச்சவரம்பான ரூ.2.5 லட்சம் என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த சூழ்நிலையில் பாராளுமன்றத்தில் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை தாக்கல் செய்த மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-
பாஜக ஆட்சியில் வரி வருவாய் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.  வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. வருமான வரித்துறையை மக்கள் எளிதில் அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜிஎஸ்டி முறையால் வரி வருவாய் அதிகரித்துள்ளது. 
வருமான வரி கணக்கு தாக்கல் 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக அதிகரித்துள்ளது. நடுத்தர மக்கள் மீதான வரிச்சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.50 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.                                                                     ► ஜிஎஸ்டி வரி மூலமாக நாடு முழுவதும் ஒரே வரி அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
► 2013- 14ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் வரி வருவாய் ரூ.6.38 லட்சம் கோடியில் இருந்து ரூ.12 லட்சம் கோடியாக  அதிகரித்துள்ளது.
► வரி செலுத்துவோர் எண்ணிக்கை 80 சதவீதமாக அதிகரித்துள்ளது.
► நடுத்தர மக்கள் மீது வரி சுமையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
► ரூ. 80 ஆயிரம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
►கடந்த ஜனவரி மாதம் ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
► மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கான வரி 5% என்ற வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
► ரூ. 6,900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில்பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன
► பண மதிப்பு நீக்கத்தால் 1.73 லட்சம் கோடி கருப்பு பணம் வெளியே வந்துள்ளது.
► 3.38 லட்சம் போலி கம்பெனிகளை மத்திய அரசு கண்டுபிடித்து அந்த கம்பெனிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
► கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் ரூபாய் 50,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
► அடுத்த 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
► திரைப்பட படப்பிடிப்பில் இனி ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படும்.
► 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வளர்ச்சிக்கு 10 அம்ச திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
► இந்தியாவின் பொருளாதாரத்தில் மேம்பாடு, டிஜிட்டல் இந்தியா, உள்கட்டமைப்பில் தன்னிறைவு, சுகாதாரமான குடிநீர் ஆகியவற்றுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
► தனிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வருமான வரி உச்ச வரம்பு இரண்டு மடங்காக உயர்கிறது.
► ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் 3 கோடி பேர் பயன்பெறுவர்.
► ஆண்டுக்கு ரூபாய் 6.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
► மேலும், டெபாசிட்டில் கிடைக்கும் 50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி பிடித்தம் இல்லை. தனிநபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து நிரந்தக்கழிவு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.பட்ஜெட்டின் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளிக்கப்படும் .
*  சூரிய மின் சக்தி கடந்த 5 ஆண்டுகளில் 10 மடங்காக உயர்வு
* உள்நாட்டு நீர்வழி சரக்கு போக்குவரத்து வடகிழக்கு மாநிலங்களிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது 
* வட கிழக்குப் பகுதிக்கான ஒதுக்கீடு இந்த ஆண்டில் 58,166 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 21% உயர்வு
* இறக்குமதி குறைவதால் ஹைட்ரோகார்பன் உற்பத்தியை அதிகரிக்க ஒரு அவசர நடவடிக்கை தேவை.
* இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது.  செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்ததன் மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது.
* கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் கோடி கண்டறியப்பட்டுள்ளது
* ஜிஎஸ்டி அறிமுகம், வரி வசூலிப்பில் மிகப்பெரிய சீர்திருத்தமாக அமைந்துள்ளது  ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரியில் சில மாற்றம் கொண்டுவரப்படும்.
* ஜி.எஸ்.டி வரி தாக்கல் ஆன்லைன் மூலம் மேற்கொள்வது மேலும் எளிதாக்கப்படும்.
* ஒரு மாதத்திற்கு ரூ. 97,000 கோடி வரி வசூலாகிறது.
* அத்தியாவசிய மற்றும் ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது மிக மிக குறைந்த அளவு வரி 
* வரிவருவாய் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு அதிகரிப்பு 
* சினிமா தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி மிக குறைந்த அளவாக 12%  விதிக்கப்பட்டுள்ளது
* அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த 8 ஆண்டுகளில் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நாங்கள் விரும்புகிறோம்.
* பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு நேரடி வரி வசூல் 18%  அதிகரித்துள்ளது.மேலும், 1 கோடி மக்களுக்கு மேல் முதல் முறையாக IT  ரிட்டன்  தாக்கல் செய்துள்ளனர்.
*  உலக செயற்கைக்கோள்களின் ஏவுதள மையமாக இந்தியா உள்ளது என கூறி உள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo