Onetamil News Logo

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற பிறகு ரூ.1.30 லட்சம் கோடி கறுப்பு பணம்  கண்டுபிடிப்பு

Onetamil News
 

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற பிறகு ரூ.1.30 லட்சம் கோடி கறுப்பு பணம்  கண்டுபிடிப்பு


புதுடெல்லி  2019 பிப்ரவரி 1 ; இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற பிறகு ரூ.1.30 லட்சம் கோடி கறுப்பு பணம்  கண்டுபிடிக்கப்பட்டது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற பிறகு ரூ.1.30 லட்சம் கோடி கறுப்பு பணம் வெளி வந்துள்ளது என்று இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பட்ஜெட் தாக்கல் செய்தபோது பியூஷ் கோயல் கூறியதாவது:3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.1,600 கோடி மதிப்பு சொத்து முடக்கப்பட்டது. ரூ. 6,900 கோடி பினாமி சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.ரூபாய் நோட்டு வாபசிற்கு பின்னர் 1 கோடி பேர் வரி செலுத்தினர். வரி கட்டமைப்பில் 10.96 கோடி மக்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கையின் காரணமாக 1.30 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் வெளிவந்துள்ளது. நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை தொடரும் இவ்வாறு அவர் கூறினார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo