Onetamil News Logo

நீண்டகாலமாக கணவனுடன் ‘உறவுக்கு’ மனைவி மறுத்தாலும் விவாகரத்து வழங்கலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Onetamil News
 

நீண்டகாலமாக கணவனுடன் ‘உறவுக்கு’ மனைவி மறுத்தாலும் விவாகரத்து வழங்கலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


புதுடெல்லி,2020 மார்ச் 16:-எந்த விதமான காரணமும் இன்றி, நீண்டகாலமாக கணவனுடன் ‘உறவுக்கு’ மனைவி மறுத்தாலும் விவாகரத்து வழங்கலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
தனது மனைவியின் உடல் நலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருந்த நிலையில், எந்த காரணமும் இன்றி, கடந்த 4½ ஆண்டுகளாக ‘உறவுக்கு’ மறுத்து மனரீதியாக கொடுமைக்கு ஆளாக்கி வருகிறார். அதனால், தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என கணவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியது.
ஹரியானா மாநிலத்தைத் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2001, நவம்பர் 26-ந்தேதி  திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 10 மற்றும் 9 வயதில் இரு மகன்கள் உள்ளனர். 
இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே மனகசப்பு ஏற்பட்டதையடுத்து இருவரும் விவாகரத்துக் கோரி கடந்த 2013-ம் ஆண்டு கீழ்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அப்போது கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட கணவர் தனக்கு மனைவியால் நேர்ந்த கொடுமைகள் குறித்து கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை எனக்கூறி 1955ம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின்படி விவாகரத்து வழங்க மறுத்து கடந்த மார்ச் மாதம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட கணவர் இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி  உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “ என்னுடைய மனைவி எந்த விதமாக உடல்நலக் கோளாறு இல்லாத போதிலும், என்னுடைய ‘உறவுக்கு’ கடந்த 4½ ஆண்டுகளாக மறுத்து, எனக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். 
என் மனைவி மனரீதியாக என்னை கொடுமைப்படுத்துவதோடு என் குடும்பத்தினர்களையும் கொடுமைப்படுத்தி வந்தார். வீட்டுவேலையைக் கூட எனது மனைவி செய்யவில்லை. அவரின் நடத்தை பொருத்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது. இதனால், ஒரே வீட்டில் இருவரும் வசித்தபோதிலும், தனித்தனியாக அறையில் இருக்க எனது பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர். ஆதலால் எனது மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும்'' எனக் கோரி இருந்தார்.
இந்த வழக்கின்  விசாரணை முடிந்தநிலையில் நீதிபதி பிரதீப் நந்த்ராஜோக் முன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:
இந்த மனுவை தீர ஆலோசனை செய்ததில், ஒரே வீட்டில் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தபோதிலும், கடந்த 4½ ஆண்டுகளாக கணவருடன் ‘உறவு’ வைக்க மனைவி மறுத்து மனரீதியாக அவரை கொடுமைப்படுத்தியுள்ளது தெரியவருகிறது. இந்த 4½ ஆண்டுகளாக மனைவிக்கு எந்தவிதமான உடல்நலக் கோளறுகளும் இல்லை, உறவுக்கு மறுப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தையும் கூறவில்லை. ஆதலால், நீண்டகாலமாக காரணமின்றி கணவருடன் உறவுக்கு மறுத்ததால் மனைவியிடமிருந்து மனுதாரருக்கு விவாகரத்து வழங்கலாம். இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo