Onetamil News Logo

ஜே.பி.நட்டா பாஜகவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்?

Onetamil News
 

ஜே.பி.நட்டா பாஜகவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்படுகிறார்?



டெல்லி  2019 ஜூன் 2 ;பாஜகவின் தலைவரான அமித்ஷா மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டுள்ளதால், அந்தபதவி விரைவில் மாற்றப்பட இருக்கிறது.பாஜகவின் கொள்கைப்படி ஒரு நபருக்கு ஒரு பதவி என்பதால் கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமித்ஷா இடத்தில் கட்சியை வழிநடத்திச் செல்ல தகுதியான தலைவர் யார் என்று மோடியும் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினர்.இதுவரை எந்த ஒரு புகாரும் இல்லாதவராக இருக்கும் ஜே.பி.நட்டா, மோடி மற்றும் அமித் ஷாவின் நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறார். அவர் பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நட்டா தவிர பூபேந்திர யாதவ், ஓபி மாத்தூர் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo