Onetamil News Logo

ப.சிதம்பரத்திற்கு 74 வயது ; திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், வீட்டுக் காவலில் வைக்குமாறும் வழக்கறிஞர் கபில்சிபல் கேள்வி? அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு

Onetamil News
 

ப.சிதம்பரத்திற்கு 74 வயதாகியுள்ளதை சுட்டிக்காட்டி, அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், வீட்டுக் காவலில் வைக்குமாறும் வழக்கறிஞர் கபில்சிபல் கேள்வி? அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு 



டெல்லி 29 ஆகஸ்ட் 2019: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் ஒருநாள் நீட்டிக்கப்பட்ட நிலையில், அவரை திஹார் சிறைக்கு அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 
ஐஎன்எக்ஸ் மீடியா வழங்கிய வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, கடந்த 21ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. முதலில் 4 நாட்களும், பிறகு 5 நாட்களும் அதன் பின் 3 நாட்களும் சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரிக்க, சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், ப.சிதம்பரத்திற்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது மற்றும் அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிதம்பரத்திற்கு 74 வயதாகியுள்ளதை சுட்டிக்காட்டி, அவரை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்றும், வீட்டுக் காவலில் வைக்குமாறும் வழக்கறிஞர் கபில்சிபல் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பக் கூடாது என்று கூறிய நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு, இடைக்கால ஜாமீன் கேட்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறு சிதம்பரம் தரப்பையும், அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது.சிதம்பரத்திற்கு விசாரணை நீதிமன்றம் ஒருவேளை இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்தால், அவரை வரும் 5ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை வரும் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 3 நாள் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சிபிஐ ஆஜர்படுத்தியது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர், சிதம்பரத்திற்கு ஒரு நாள் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். தொடர்ந்து இன்று பிற்பகல் 3.50 மணிக்கு இடைக்கால ஜாமின் கோரிய மனுவை விசாரிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo