Onetamil News Logo

பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுதலையாகிறார். 

Onetamil News
 

பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானி அபிநந்தன் இன்று விடுதலையாகிறார். 


 தூத்துக்குடி 2019 பிப்ரவரி 28 ;பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானி அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க இந்திய அரசு வலியுறுத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் பிடியில் உள்ள இந்திய விமானி அபிநந்தன் இன்று  விடுதலை செய்யப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் பிரதமருமான  இம்ரான் கான் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக அபிநந்தன் விடுவிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                             
                          
பாகிஸ்தானில் சிக்கியுள்ள, நமது இந்திய விமானப்படை வீரர், அபினந்தன் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, தமிழர், இன்று உலக அமைதிக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய, பயங்கரவாத நடடவடிக்கைகளை அழிக்கும் போரில், தன்னை ஈடுபடுத்தி கொண்டவராக அபினந்தன் மிகப்பெறும் பங்களிப்பை செய்துள்ளார்.
                                                                                                                                             இந்திய எல்லைக்குள் ஊடுருவி, தாக்க வந்த பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டுவீழ்த்திய பெருமையை பெற்றுள்ளார். அவருடைய விமானம் தாக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து தப்பித்து தரையிரங்கிய அபினந்தனை, பாகிஸ்தானியர்கள் சுற்றிவரைத்து தாக்கி காயப்படுத்தி இருக்கிறார்கள். பின், பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் ஒப்படைத்ததால், அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள், இந்திய அரசின் துல்லிய தாக்குதலை வரவேற்றுள்ளனர். 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo