Onetamil News Logo

பீட்டர் அல்போன்ஸை விமர்ச்சித்த சசிகலா புஷ்பா எம்.பி ;தென்காசி, குற்றாலத்தில் நீங்கள் நடத்திய லாட்ஜ் எத்தனை? அவற்றில் நடந்த தொழில் என்னவென்று உங்களால் கூற இயலுமா?

Onetamil News
 

பீட்டர் அல்போன்ஸை விமர்ச்சித்த சசிகலா புஷ்பா எம்.பி ;தென்காசி, குற்றாலத்தில் நீங்கள் நடத்திய லாட்ஜ் எத்தனை? அவற்றில் நடந்த தொழில் என்னவென்று உங்களால் கூற இயலுமா?


டெல்லி 2019 ஆகஸ்ட் 7 ;தென்காசி, குற்றாலத்தில் நீங்கள் நடத்திய தங்கும் விடுதிகள் எத்தனை? அவற்றில் நடந்த தொழில் என்னவென்று உங்களால் கூற இயலுமா? பீட்டர் அல்போன்ஸை கடுமையாக விமர்ச்சித்த சசிகலா புஷ்பா! காரணம் என்ன?
மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸை வெளுத்து வாங்கி இருக்கிறார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்ட நிகழ்வை முன்வைத்து தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட பீட்டர் அல்போன்ஸ், இந்திய ராணுவ வீரர்கள் அங்குள்ள பெண்களை கற்பழிப்பதாக குறிப்பிட்டு பேசினார். இது ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பலரும் பீட்டர் அல்போன்ஸை தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா கடுமையாக பீட்டர் அல்போன்ஸை சாடியுள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :-
வெட்கமாக இல்லையா மிஸ்டர் பீட்டர் அல்ஃபோன்ஸ்?
ராணுவத்தினர் காஷ்மீரில் பெண்களை கற்பழிக்கிறார்கள் என டிவியில் பேச, சிந்திக்க எது உங்களை தூண்டியது? உங்கள் மதமா??
கொடுங்குளிர், கடும்பனியில், உறைந்து சுட்டெரிக்கும் வெயிலில் உழன்று எதிரிகளிடமிருந்து நம்மை காத்து கொண்டிருக்கும் ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தி விட்டீர்களே...
தென்காசி, குற்றாலத்தில் நீங்கள் நடத்திய தங்கும் விடுதிகள் எத்தனை? அவற்றில் நடந்த தொழில் என்னவென்று உங்களால் கூற இயலுமா?
72 ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்னையை, இதில் 60 ஆண்டுகள் உங்கள் காங்கிரஸ் ஆட்சி. வரலாற்று சாதனையாக சாதித்து முடித்திருக்கிறது மோடி தலைமையிலான பிஜேபி அரசு.
மாபெரும் நிகழ்வை தாங்க முடியாமல், மத கண்ணோட்டத்துடன் காழ்ப்புணர்வின் உச்சத்தில் உளறியுள்ளீர்கள்.
உங்கள் ஆட்சி காலத்திலும் ராணுவம் அப்படிதான் நடந்து கொண்டதா? எனில் நீங்கள் என்ன களை பறித்து கொண்டிருந்தீர்களா!??
தன் சுய கோபத்திற்காக ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த உங்கள் தலைவி நேற்று பேசியிருக்கலாமே, ஏன் குலாம்நபி ஆசாத்தை பேசவிட்டு அமைதி காத்தார். உங்கள் ராகுல் கூட பேச துணியவில்லை?
கொல்லப்பட்ட தமிழர்களில் கிறிஸ்துவர்களும் உண்டு என்பதை அறிவீர்களா!?
தேசிய கட்சி போர்வையில், வெள்ளை பாவாடைக்குள் அரசியல் செய்வதை கைவிட்டு. அங்கி மாட்டிக்கொண்டு பிரசங்கம் செய்ய போகலாம்.
அரசியல் பதவிகள் மூலம் கோடிகளை குவித்த உங்களுக்கு, ராணுவ வீரர்களின் தியாகம் தெரிந்திருக்க நியாயமில்லை.
மோடியும், அமித்ஷாவும் செய்தது வரலாறு பேசும் சாதனை...
நீங்கள் பேசியது வரலாற்றில் அழிக்க முடியாதவொரு வேதனை, துடைக்க இயலாத கறை!
வருங்காலம் உங்களை காறி உமிழும்.இவ்வாறு (சசிகலா புஷ்பா MP ,06.08.2019.)அவர் கூறியுள்ளார்.

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo