Onetamil News Logo

மின்வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தூத்துக்குடியில் கோரிக்கை..தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க அலுவலக திறப்பு விழா

Onetamil News
 

மின்வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தூத்துக்குடியில் கோரிக்கை..தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க அலுவலக திறப்பு விழா 


தூத்துக்குடி 2023 ஜூன் 4 ;மின்வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட தூத்துக்குடியில் கோரிக்கை,, தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது.                                                                                       தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்டக் கலையின் சங்கு அலுவலக திறப்பு விழா வட்ட தலைவர் ஜே வினோத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது வட்டச் செயலாளர் முன்னிலை வகித்தார் வட்ட துணைத்தலைவர் டி முத்துராமலிங்கம் வரவேற்புரை ஆற்றினார் மாநில பொதுச் செயலாளர் ஏற்றி வைத்து சங்கு அலுவலகத்தை திறந்து வைத்தார் மாநில தலைவர் சி கண்ணன் கல்வெட்டை தான் வைத்தார் மறைந்த தலைவர் இரா மனோகரன் படத்தை முன்னாள் வட்டத் தலைவர் கூறிய தங்கச்சாமி திறந்து வைத்தார்.                                                                    
                  நிகழ்வில் மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடாஜலபதி, மாநில இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, நெல்லை மண்டல செயலாளர் பொறியாளர் எம் மாதவன், மாநில செயலாளர் நயினார் பென்சனர் ஐக்கிய சங்கத் தலைவர் மயிலேறும் பெருமாள் முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னாள் மாவட்ட தலைவர் பொறுமையாளர் தங்கசாமி பொருளாளர் மாவட்ட பொருளாளர் முத்துசாமி, வட்டச் செயலாளர் பழனிக்குமார், திருநெல்வேலி, கன்னியாகுமரி, வட்ட செயலாளர், சுரேஷ் குமார் விருதுநகர் வட்ட செயலாளர் வட்டத் தலைவர் சந்திரகுமார் திருநெல்வேலி வட்டச் செயலாளர் காற்றாலை மாடசாமி உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்வில் தூத்துக்குடி வட்ட நிர்வாகிகள் வட்டத் துணைத் தலைவர் முத்துராமலிங்கம். வட்டத் துணைத் தலைவர் ஸ்ரீகுமார், வட்டத்துணைச் செயலாளர் முத்து கருப்பசாமி, வட்ட இணைச்செயலாளர் நந்தகுமார், வட்ட இணை அமைப்பு செயலாளர் போத்தி ரெட்டி, பொறியாளர் பிரிவு செயலாளர் செந்தூர் பாண்டி, மகளிர் அணி செயலாளர் கார்த்திகா பேங்க் மேன் பிரிவு செயலாளர் மகேஷ் குமார் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கோட்ட நிர்வாகிகள் கோவில்பட்டி முத்துமாரியம்மன். பாலமுருகன். திருச்செந்தூர் வேல்மணி, செல்வ வெங்கடேஸ்வரன், தூத்துக்குடி கணேசன், பவுன்ராஜ், தூத்துக்குடி ஊரகம் சிவானந்தன், கணேசன், தூத்துக்குடி பொது நாராயணன் சோமசேகர் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.                                                                          
             வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;மின்வாரியத்தில் காலியாக உள்ள 58 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட மாநில அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் 1 /12 /2019க்கு பிறகு பனியேற்பு செய்த பணியாளர்களுக்கு கடந்த 16 5 2023 அன்று செய்து கொள்ளப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்த பயன்களை வழங்கிட உரிய நடவடிக்கை மாநில அரசு எடுத்திட வேண்டும் 1/12 /2015 க்கு பிறகு மின்வாரிய பணியில் சேர்ந்தவர்களுக்கு கடந்த 22/ 2 /2018 ஆம் தேதி செய்து கொள்ளப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின்படி வழங்கப்பட்ட பணப்பயனை தற்போது ரத்து செய்து ஊதிய பிடித்தம் செய்திட உத்தரவு பிறப்பித்திட்ட மின்வாரிய நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறது மேலும் உடனடியாக உத்தரவை வாபஸ் பெற கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo