Onetamil News Logo

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் OBC- 27 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 

Onetamil News
 

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் OBC- 27 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 13 ;தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்  27 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடந்தது. 
தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் இசக்கிராஜா தலைமையில் சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகில் அடையாள ஆர்ப்பாட்டம் நடந்தது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர தலைவர் அங்குசாமி, செயலாளர் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் நாகராஜ், செயலாளர் கருப்பசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 
உச்ச நீதிமன்றம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்த பிறகும், இன்றைக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசின் எந்தத் துறையிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
 17.1.2019 அன்று பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியின்படி, மத்தியப் பல்கலைக் கழகங்கள் முழுக்க முழுக்க மேல்தட்டு வகுப்பினரின் சொர்க்கபுரியாக மாற்றப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது. பத்திரிகை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், மத்திய அரசில் உள்ள 71 துறைகளில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் 14.94 சதவீதம் மட்டுமே பணி புரிகிறார்கள்.
மத்திய அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டின் நிலை 30 வருடங்கள் கழிந்த பிறகும் இதுதான். ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு சிதைந்து கிடக்கிறது. இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு என்று மத்திய அரசு, ஒரு அரசியல் சட்டத் திருத்தத்தை - அவசர அவசரமாகக் கொண்டு வந்து - தேர்தலுக்கு முன்பு நிறைவேற்றியது.
இந்த நேரத்தில் ஒரு கருத்தை முன் வைக்க விரும்புகிறேன். முதன்முதலாக அரசியல் சட்டம் திருத்தப்பட்டபோதே சிலர் பொருளாதார ரீதியாக (Economically) என்ற சொற்றொடரும் இடம் பெற வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். மருத்துவக் கல்லூரி சேர்க்கைகளில் அந்தந்த மாநிலங்களில் இடஒதுக்கீடு கோட்பாடினை உடனடியாக அமல்படுத்த வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திக், முத்தையாபுரம் பகுதி செயலாளர் நாகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo