ஏழைகளுக்கு தேவையான பால் மற்றும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு மத்திய மாநில அரசை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி தென் மண்டல செயலாளர் அருணா தேவி ரமேஷ்பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஏழைகளுக்கு தேவையான பால் மற்றும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு செய்துள்ள ஒன்றிய அரசு மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ள மாநில அரசை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி தென் மண்டல செயலாளர் அருணா தேவி ரமேஷ்பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு பால் மற்றும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது இதன் காரணமாக ஏழை நடுத்தர சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் தமிழக அரசு சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இவ்வாறு மக்களை எதிராக செயல்படும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தென் மண்டல செயலாளர் அருணா தேவி தலைமையில் இந்திய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், மண்டல இணை செயலாளர் கணேஷ் குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் லித்யா பிரவீன், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் பால்துரை, மாவட்ட மாணவரணி செயலாளர் காட்வின், மாவட்ட அமைப்பார் விகேன்ஸ்வரன், மீனவரணி பெணிபிட், திலிப் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.