Onetamil News Logo

தமிழ் நாடு  மீன்வளப் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ்  மாணவர்கள், சார்பில்  டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு 

Onetamil News
 

தமிழ் நாடு  மீன்வளப் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ்  மாணவர்கள், சார்பில்  டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு 



நாகப்பட்டினம், அக்.12 ;
தமிழ் நாடு  மீன்வளப் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ்  மாணவர்கள், சார்பில்  டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
நாகப்பட்டினம் தமிழ் நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான மீன்வளப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மூன்று நாட்கள் நடைபெறும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 12.10.2017 அன்று கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களை சுத்தம் செய்தனர். முன்னதாக இந்நிகழ்ச்சியையினை மீன்வளப் பொறியியல் கல்லூரியின் முதல்வர் சி.பாலசுப்ரமணியன் அவர்கள் மாலை 5.00 மணியளவில் துவங்கி வைத்தார். மீன்வளப்  பொறியியல் கல்லூரியைச் சார்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களும் ஆசிரியர்களும் இந்த சுத்தப்படுத்துதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதர குப்பைகளை  அகற்றி சுத்தம் செய்தனர். மேலும் தேங்கி நிற்கும் நீர்களில் டெங்குவைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் விதமாக கிருமி நாசினி பொடியை தூவினர். இந்நிகழ்ச்சியை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர்.மா.இராமர் மற்றும் முனைவர்.தே.கேசவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்ச்சியின் அடுத்தகட்டமாக நாளை கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo