Onetamil News Logo

பிணம் தின்னி கழுகு  - குறும்படம்  விமர்சனம்  ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கடந்து செல்ல முடியாது

Onetamil News
 

பிணம் தின்னி கழுகு  - குறும்படம்  விமர்சனம்;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கடந்து செல்ல முடியாது 


தேனி  2019 அக்டோபர் 14 ;பிணம் தின்னி கழுகு  - குறும்படம்  விமர்சனம்  ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கடந்து செல்ல முடியாது .     
 பிணம் தின்னி கழுகு  - குறும்படம்  விமர்சனம் ;  இயக்குனர்  ராஜபாண்டியன் கூத்துப்பட்டறை முகுந்த் ,சுருளிப்பாட்டி சிவாஜி ,திவ்யா கிருஷ்ணன் , மற்றும்  பலர் நடித்துள்ளனர்.
 youtube பில் வெளியான இந்த குறும்படத்தை, வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கடந்து செல்ல முடியாது. பல இடங்களில்..பல ஊர்களில் இதுபோன்ற சம்பவங்கள் மூட நம்பிக்கை காரணமாகவும், சாதிய ஒடுக்குதல் காரணமாகவும் அரங்கேறி வருகிறது. குடியால் சீரளியும் சமூகம்., எதன் பின்புலத்தில் குடியை தேர்வு செய்கிறார்கள்.., என்பது போன்ற பல நிகழ்வுகளை பல காட்சிகளில் புரியும் வகையில் வடிவமைத்துள்ளார். ஆணும்..பெண்ணும் காதலிக்க சாதி தேவையில்லை, மனம் போதுமே! என்கிற என்ன ஓட்டத்தை மீண்டும் பிரதிபளித்திருப்பது. அவர்கள் இருவரும்  (தாய் தெய்வம்) முன்பே தன் வாழ்க்கையை தொடங்குவதுமாக மிக அழகாக படம்பிடித்துள்ளார் இயக்குனர். காலம் காலமாக இவர்கள் இந்த தொழிலை மட்டும் தான் செய்ய வேண்டும். இந்த தொழிலை தவிர வேறு எங்கும் செல்ல கூடாது எனும் மனுவாத வெறியை ஆங்காங்க இயக்குனர் காட்சிகளில் சுட்டிக்காட்டியிருப்பது நேர்த்தி.சமையல் மந்திரம் திவ்யா அவர்களின் யதார்த்த நடிப்பு இந்த கதையை வேறு வடிவத்தில்..மிக யதார்த்தமாக எடுத்து சென்றுள்ளது. இயக்குனர் பல கோணங்களில்  வாழ்வியலை  அழகாக காட்டியுள்ளார். கருப்பு தான் அழகுங்க!.. நாயகனின் நடிப்பும் செயற்கையாக இல்லாமல் மிக வெளிப்படையாகவே இருந்தது. கடைசி காட்சியை நோக்கி நகரும் போது, திகில் தான் பற்றி கொள்கிறது. பல மசால தனமான சினிமாக்களாக இருந்திருந்தால், ஒரு பைட் கொடுத்து..பத்து பக்கம் பஞ்ச் கொடுத்து, பிரமாண்டம் செய்திருக்கலாம், ஆனால் இது யதார்த்த வாழ்வியல் ஆச்சே..! மனதை நெகிழ வைக்கும் கடைசி காட்சி, கண்ணீர் மல்க வைத்தது. எந்த குழந்தையின் எதிர்காலம் என்னா? யார் மீட்பார்? இது தொடருமா? அல்லது முற்துப்புள்ளியா?? என்கிற பெரும் கேள்வியை இயக்குனர் நம்மிடத்திலேயே விட்டுச் சென்றுள்ளார்.
வசனங்கள் அருமை.குழப்பம் இல்லாமல் சொல்வதை சரியான இடத்தில் சொல்லியுள்ளார் இயக்குனர். இடத்தேர்வும்..ஒளிப்பதிவும் மிக மிக அழகு. ஒளிப்பதிவு இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சுமந்து செல்கிறது.,அதற்கு உயிரோட்டமாய் அமைந்துள்ள இசையும் மிக அற்புதம். அனைத்து கதாப்பாத்திரங்களும் தனது பாத்திரங்களை மிக இயல்பாக செய்துள்ளனர். வில்லன் கதாப்பாத்திரத்தை பார்க்கும் போது, என் மனதில் ஒரு தாமரை கட்சியை சார்ந்த அரசியல்வாதிதான் வந்து சென்றார்...யூகித்து கொள்ளுங்கள். படம் தேனியை சுற்றி எடுத்திருப்பதால் இயற்கை கொஞ்சும் அழகியலுக்கு பஞ்சமில்லை. படம் முடியும் அந்த ஒற்றை காட்சியை பார்க்கும் போது மன நெகிழ்வை கொடுக்கிறது. இப்படி ஒரு சிறப்பான படைப்பில் கை கோர்த்து, தோல் கொடுத்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும்.. இதுபோன்ற உண்மை சம்பவங்களை படம் எடுக்க, தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் அசோக்குமார் அவர்களுக்கு ஹாட்சாப். வாழ்த்துகள்.ராஜபாண்டியன் செல்ல வேண்டிய உயரம் இன்னும் உள்ளது. அதை அடுத்தடுத்த படைப்புகளில் தொட்டுவிட எனது நல்வாழ்த்துகள். நிச்சயம் தொடுவார்..
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo