Onetamil News Logo

தமிழ் நாடு மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி  இரண்டாவது மாநில மாநாடு ;மதுவால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து இளம் விதவைகளாக இருக்கும் பெண்கள் தங்கள் சோகமான அனுபவங்களை பகிர்த்துக்கொண்டனர்  

Onetamil News
 

தமிழ் நாடு மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி  இரண்டாவது மாநில மாநாடு ;மதுவால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து இளம் விதவைகளாக இருக்கும் பெண்கள் தங்கள் சோகமான அனுபவங்களை பகிர்த்துக்கொண்டனர்  


தேனி 2019 மார்ச் 14 ;தேனியில்  தமிழ் நாடு மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி  இரண்டாவது மாநில மாநாடு நடைப்பெற்றது.மாநாட்டிற்கு தமிழக மது ஓழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில அமைப்பார் வழக்கறிஞர்.சி.சே.இராசன் தலைமை தாங்கினார்.தமிழ் மாநில பெண்கள் இயக்க தலைவி அருண்மொழி வரவேற்றார்.தமிழக பெண்கள் கூட்டமைப்பு இராமலட்சுமி,சுவாதி பெண்கள் இயக்கம் மஞ்சுளா,தீபம் பெண்கள் கூட்டமைப்பு ஜெயந்தி,அயக்ஃப் மாணவர் இயககம் செல்வி ராஜீ,சமம் குடிமக்கள் இயக்கம் திரு ஏசுபாதம்,மீனவர் உரிமைக்கூட்டமைப்பு ஜான் பி ராயன்,கிராம முன்னேற்ற இயக்கம் வீராச்சாமி,தேன்சுடர் பெண்கள் இயக்கம் கருத்தம்மாள் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
சுய ஆட்சி இந்தியா கட்சியின் தேசிய துணைத்தலைவர் கிறிஸ்டினா சாமி,மூத்தப்பத்திரிகையுளர் ப.திருமலை,தமிழக மதுஒழிப்பு இயக்க கூட்டமைப்பு ஆலோசகர்  டி.வி.மூருகேசன்,மதுஒழிப்பு செயல்பாட்டாளர் ஆனந்தியம்மாள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் .மாநாட்டில் மது எதிப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செழுத்தப்பட்டது .மதுவால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து இளம் விதவைகளாக இருக்கும் பெண்கள் தங்கள் சோகமான அனுபவங்களை பகிர்த்துக்கொண்டனர் 
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ;
1. தமிழகத்தில் குடிநோயாளிகள் மற்றும் இளம் விதவைகள் அதிகரித்து வருகிறார்கள். அத்தோடு பதிமூன்று வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் மதுபோதைக்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் எதிர்காலத் தமிழகம் ஆரோக்கியமற்ற, பண்புகளையும் ஒழுக்கத்தினையும் தொலைத்த தமிழகமாக மாறும் அபாயம் உள்ளது. அதனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்திடவேண்டும். 
2. குடியால் பாதிக்கப்பட்ட மது நோயாளிகளுக்கு தமிழகத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சை வழங்கப்படவேண்டும். சிகிச்சை பெறும் காலங்களில் அவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவேண்டும்
3. குடிநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் மறுவாழ்வுக்கென தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும். காரணம், மதுக்கடைகள் அரசு மூலமாகவே செயல்படுகின்றன. 
4. டாஸ்மாக் கடையிலுள்ள மதுபானங்கள் சட்டத்துக்குப் புறம்பாக சிறிய பெட்டிக்கடைகளிலும், வீடுகளிலும் விற்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, மாவட்ட ஆட்சியர் மாதம்தோறும் இதுகுறித்து ஆலோசனைக்கூட்டம் நடத்திடவேண்டும். 
5. தமிழகத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் பார்களையும் அனுமதியின்றி நடக்கும் பார்களும் உடனடியாக மூடப்படவேண்டும். 
6. அரசியல்கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கைக் கொண்டுவருவோம் என உறுதியளிக்கவேண்டும். 
7. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து வாக்குப்பதிவு நாள் முடியும் வரை மதுபானக்கடைகள் மூடப்படவேண்டும்.
8. குடியால் மரணமடைந்த இளைஞர்களின் இளம் விதவைகளின் மறுவாழ்வுக்காக அரசு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்திடவேண்டும். அவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு, மற்றும் விதவையருக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றாற்போல வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். 
9. மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதை அரசு தவிர்க்கவேண்டும். இதனால், அதிகாரிகள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். 
10. அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்போது மதுபானக்கடைகளில் பணியாளர்களுக்கு மாற்று வேலை வழங்கவேண்டும். 
11. மதுக்கடைகளை மூடுவதற்கான அதிகாரம் கிராமசபைகளுக்கு வழங்கப்படவேண்டும். கிராமசபையில் பங்கேற்கும் பெரும்பான்மை மக்களின் ஆதரவுக்கு ஏற்ப கடைகள் மூடுவதற்கான சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.
12 பொள்ளாச்சி சம்பவத்தில் ஏராளமான பெண்கள் பாலியல்ரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே நீதிபதி தலைமையில் முழுமையான விசாரணை செய்யப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இதில் அரசியல் குறுக்கீடு ஏதும் இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும்

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo