Onetamil News Logo

தாதுமணல் குடோனில் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் வாலிபர் உடல் கண்டெடுப்பு 

Onetamil News
 

தாதுமணல் குடோனில் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் வாலிபர் உடல் கண்டெடுப்பு 


தூத்துக்குடி 2022 ஜூன் 21 ;தூத்துக்குடி அருகே தனியார் குடோனில் தலையில் பலத்த காயத்துடன் அழுகிய நிலையில் வாலிபர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
               தூத்துக்குடி முள்ளக்காடு அருகே பி.எம்.சி நிறுவனத்திற்கு சொந்தமான சீல் வைக்கப்பட்ட தாதுமணல் குடோன் உள்ளது. இங்கு தலையில் பலத்த காயத்துடன், அழுகிய நிலையில் வாலிபரின் உடல் கிடப்பதாக முத்தையாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 
          இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தையாபுரம் போலீசார் அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் முள்ளக்காடு மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி மகன் முகமது ரியாஸ் (வயது- 22) என்பது தெரியவந்தது.கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo