Onetamil News Logo

மாநகராட்சியின் வளர்ச்சியே எனது குறிக்கோள் - எந்த தடைகள் வந்தாலும் அதை முறியடிப்போம் - மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி

Onetamil News
 

மாநகராட்சியின் வளர்ச்சியே எனது குறிக்கோள் - எந்த தடைகள் வந்தாலும் அதை முறியடிப்போம் - மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி


தூத்துக்குடி மாநகராட்சியில் ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்று 1 வருடம் கடந்து விட்டன. இரண்டு பக்கமும் சில சமயம் கத்தி போன்று கூர்மையாக இருக்கின்றன. எந்த பக்கம் திரும்பினாலும் குத்து என்கிற நிலையில் மாநகர வளர்ச்சி பணிகளுக்காக மேயர் ஜெகன் பெரியசாமி முழு ஈடுபாடுடன் பணியாற்றி பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வருகிறார். 
ஒவ்வொரு சாலை பகுதியும் 3 வருடம், 5 வருடம் என சில விதிமுறைகளின்படி உள்ளன. ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுமையான பல திட்டங்களையும், செயல்படுத்த வேண்டும் என்ற கடமையில் நாங்கள் இருக்கிறோம். மாநகரில் தற்போது 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். 2008ல் துணை முதலமைச்சராக இருந்து தற்போது முதலமைச்சராக பணியாற்றும் ஸ்டாலின் கொண்டு வந்த பக்கிள் ஓடை திட்டம் மூலம் கடலுக்கு மழை நீர், கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது. அதையும் சுத்திகரிக்கப்பட்டு செடி வளர்ப்பதற்கென்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் 152 பூங்காக்கள் இருக்க வேண்டிய இடத்தில் 40 பூங்காக்கள் தான் இருக்கின்றன. பலர் பூங்கா இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதை படிப்படியாக மீட்போம். முத்துநகர் கடற்கரையில் ரோச் பூங்கா என பல இடங்கள் அழகுபடுத்தப்பட்டு, தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள பலரும் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்திடும் வகையில் நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவைகள் மூலம் பலனடைந்து வருகின்றனர். இதே போல் 70 ஆயிரம் மரக்கன்றுகள் மாநகராட்சி முழுவதும் நடுவதற்கு திட்டமிடப்பட்டு 12 மரக்கன்றுகள் இதுவரை நடப்பட்;டுள்ளன. மேலும், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் வகையில் 5 லட்சம் துணிப்பை மக்கள் புழக்கத்தில் கொண்டு வரும் நோக்கில் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கிட முடிவு செய்யப்பட்டு இதுவரை 2 லட்சம் துணிப்பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 வி.இ.ரோடு, ஜெயராஜ் ரோடு பகுதிகளில் பொதுமக்கள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு நல்லதொரு அமைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.
மாநகராட்சி பகுதிகளில் 4500 சாலைகள் உள்ளன. அதில் எது முக்கியமானது என்று கருதி முதல் கட்ட பணிகள் ஜனவரி பிறந்ததும் 60 வார்டு பகுதிகளிலும், புதிய தார் சாலை அமைக்கப்படும். கால்வாய்கள் பல பகுதிகளில் அமைக்கப்பட உள்ளன. பக்கிள் கால்வாய் இருந்தாலும், புதிய கால்வாய் தேவை என்கிறபட்சத்தில் திட்டம் நிறைவேற்றப்படும்.
தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை நீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கும் பணியை துரிதபடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மழைகாலம் வந்து விட்டாலே தூத்துக்குடி மக்கள் மழை தண்ணீர் வடியாமல் தவிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் விட்டு விட்டதால் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் அதிக அளவில் மழை தண்ணீரில் தத்தளித்தனர்.
    குறிப்பாக பிரையண்ட்நகர், சிதம்பரநகர், முத்தம்மாள்காலனி, ரஹ்மத்நகர், குமரன்நகர், ஸ்டேட்பேங்காலனி, அம்பேத்கர்நகர், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், கதிர்வேல்நகர், தபால்தந்திகாலனி, திரவியரத்தினம்நகர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
     இந்த நிலையில் கடந்த 2021 நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழையினால் இப்பகுதிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி நின்றது. இதனையடுத்து  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகருக்கு நேரடியாக வந்து பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட்டார். இதே நிலை அடுத்தாண்டு இருக்க கூடாது என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். முதலமைச்சரின் உத்தரவினை நிறைவேற்றும் வகையில் எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்பட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்றும் பணியை துரிதமாக மேற்கொண்டனர்.
       தொடர்ந்து நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற உடன் இப்பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அடிக்கடி வடிகால் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து கடந்தாண்டு மழைகாலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதில் தீவிரமாக செயல்பட்டு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் சென்று பணிகளை நேரில் கள ஆய்வு தற்போது சாலைகள் அமைக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் செயின்ட்தாமஸ் பள்ளி செல்லும் சாலை கிருஷ்ணராஜபுரம் வெற்றிவேல்புரம் மற்றும் கருப்பட்டி சொசைட்டி ஆகிய பகுதிகளை இணைக்கும் எஸ்.எஸ் மாணிக்கபுரம் பகுதியில் நடைபெற்று வந்த மழைநீர் வடிகால் கல்வெட்டு பணிகள் நிறைவு பெற்றதால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இரண்டு வடிகால்கள் பணிகள் நிறைவு பெற்ற வடிகால்களுடன் இணைக்குமாறு துறைசார்ந்த அலுவலர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இரவு மில்லர்புரம் மெயின்ரோட்டிலிருந்து உள்ளே செல்லும் பாதையானது இருள் சூழ்ந்து காணப்படுவதாக வந்த தகவலை அடுத்து புதியதாக ஓரு சிறிய அளவிலான உயர் மின்விளக்கு அமைப்பதற்கான பகுதியை ஆய்வு செய்து வரும் நாட்களில் இதற்கான பணிகளை தொடங்கவுள்ளதாக அப்பகுதி பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார். 
    இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்,  முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் மாநகர பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தொடர்ந்து தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக கடந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்த போது பார்வையிட்ட இடங்களில் அவரது வேண்டுகோள்படி கடந்த காலங்களை போல் அல்லாமல் இந்தாண்டு மழைநீரை தேங்க விடமாட்டோம். குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்படும் பிரையண்ட்நகர், சிதம்பரநகர், ரஹ்மத்நகர், ஸ்டேட் பேங்காலனி அம்பேத்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. மற்ற பகுதிகளிலும் முடிந்த அளவிற்கு மழைகாலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் தினேஷ்குமார் ஆகியோரின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மாநகராட்சியின் வளர்ச்சியே எனது குறிக்கோள், எந்த தடைகள் வந்தாலும் அதை முறியடிப்போம் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடியாக களமிறங்கி பணியாற்றி வருவதை பொதுமக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo