Onetamil News Logo

தேவேந்திரகுலவேளாளர் மக்கள் தமிழக முதல்வருக்கு வைத்துள்ள கோரிக்கை  

Onetamil News
 

தேவேந்திரகுலவேளாளர் மக்கள் தமிழக முதல்வருக்கு வைத்துள்ள கோரிக்கை  


சென்னை 2020 டிசம்பர் 4 ;தேவேந்திரகுலவேளாளர் மக்கள் தமிழக முதல்வருக்கு வைத்துள்ள கோரிக்கை  
 வைத்துள்ளனர். 

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு,தேவேந்திரகுலவேளாளர் மக்கள் சார்பில்  அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது....தமிழகத்தில் அட்டவணைச் சாதியினர் பட்டியலில் இருக்கும் 7 சாதிகள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அரசாங்கம் அழைக்க வேண்டும் என்று விரும்புகிறது.இந்திய அரசியல் சாசனச் சட்டம் அதற்கு அனுமதியும் அளிக்கிறது.
1. மாநில அரசு 
2. சென்சஸ் கமிஷனர் ரிஜிஸ்டர் ஜெனரல் ஆஃ இந்தியா
3 பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையம்
இந்த மூன்று அமைப்புகளும் பரிந்துரைத்தால் பாராளுமன்றம் இதை சட்டமாக்கி, பெயர் மாற்ற ஆணை வெளியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 தேவேந்திரகுல வேளாளர் மக்களிடமிருந்து பெயர் மாற்றத்திற்கான மனுவை தமிழக அரசு பெற்றுக் கொண்டுவிட்டது. அந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக மானுடவியல் அறிக்கையும் வாங்கிக்கொண்டு விட்டது.
இப்பொழுது மாநில அரசு செய்ய வேண்டியது, தனது பரிந்துரைகளை பட்டியல் சாதியினர் சம்பந்தப்பட்ட மத்திய சமூக நலத்துறை அமைச்சரவை( செயலர் SOCIAL JUSTICE AND EMPOWERMENT)க்கு 
அனுப்ப வேண்டும். 
அந்த மத்திய அமைச்சகம் தமிழக அரசு அனுப்பிய பரிந்துரைகளை பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம் நேஷனல் கமிஷன் for SC,  Census கமிஷனர்& ரிஜிஸ்டர் ஜெனரல் ஆஃப் இந்தியாவுக்கு அனுப்பி, அவர்களது பரிந்துரைகளை வாங்க வேண்டும். 
இது பட்டியல் சாதியினர் அட்டவணையில் நடக்கும் மாற்றம் என்பதால், SC கமிஷன் இடமும், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை தன்னிடத்தில் ரிஜிஸ்டர் ஆக வைத்திருப்பதால் சென்சஸ் கமிஷனர் அண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் ஜெனரல் இந்தியாவுக்கும் அனுப்பி அவர்களது பரிந்துரையை பெற வேண்டியது கட்டாயம்.
SC Commissionலும், Census Commissionலும் ஏழு பிரிவுகளாகத் தான் கணக்கெடுக்கப்பட்டு ரெஜிஸ்ட்ரில் இருப்பார்கள். அதை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே *பெயரில் மாற்றவேண்டும். ரெஜிஸ்டர் திருத்தப்பட வேண்டும்.  பதிவேடுகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
SC கமிஷன் மற்றும் ரிஜிஸ்டர் ஜெனரல்( சென்சஸ் கமிஷனர்) இருவரும் தனது ஒப்புதலை மத்திய சமூகநலத்துறை சோஷல் ஜஸ்டிஸ் அண்ட் எம்பவர்மெண்ட்  ற்கு அனுப்புவார்கள்.
(1. SC commission 2 .ரெஜிஸ்ட்ரர் ஜெனரல் அவர்தான் சென்சஸ் கமிஷனர்ம் கூட.)
இப்போது
1 தமிழக அரசின் பரிந்துரை 
2 தேசிய எஸ்.ஸி கமிஷன் 
3 சென்சஸ் கமிஷனர் ஆஃப் ரெஜிஸ்ட்ரர் ஜெனரல் இந்தியா 
ஒப்புதல்.இந்த மூன்றையும் மத்திய அமைச்சரவை பெற்றவுடன்
 (சமூக நலத்துறை (சோசியல் ஜஸ்டிஸ் அண்ட் எம்பவர்மெண்ட் மினிஸ்ட்டரி)) இந்த மூவருடைய பரிந்துரையையும் மத்திய அமைச்சரவை  Cabinet க்கு அனுப்பும். 
பிரதமர் தலைமையிலான காபினெட் , பாராளுமன்றத்தில் ஒப்புதல் வாங்கிய உடன் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற அரசாணை கிடைத்துவிடும். 
பெயர் மாற்றம் சம்பந்தப்பட்ட மூன்று அமைப்புகளில் இரண்டு துறைகள் மத்திய அரசிடம் உள்ளது.
 ரிஜிஸ்டர் ஜெனரல் அண்ட் சென்சஸ் கமிஷனர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாஜி  கீழ் வருகிறார் .
எனவே தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை தமிழக அரசிடமிருந்து டெல்லி சென்றால் பிரதமரும் உள்துறை அமைச்சரும் தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற ஆணை பெற்று தருவார்கள் என்பது உறுதி.
அதற்கு தமிழக அரசு முதல் ஸ்டேஜில் தடைபோட்டு முடக்கி வைத்துள்ளது என்பதே *உண்மை. 
 தமிழக அரசு பெயர் மாற்றம் Proposal மனுவை அனுப்பி வைக்க என்ன தயக்கம்?
தமிழக அரசு அந்த Proposal மனுவை அனுப்பி வைத்தால் தானே மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும்?
இப்பொழுது தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பெயர் மாற்றத்திற்கான( modification/ name change/ ஒற்றைப் பெயரில் அழைப்பது) பற்றிய மத்திய அரசின் மற்றும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் செயல்முறைகள்,  நடைமுறைகள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டு விட்டார்கள்.
எனவே எந்தவித தயக்கமுமின்றி தமிழக அரசு புரபோசல்(proposal) மனுவை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo