Onetamil News Logo

அரசியல் கட்சி சார்பாக விளம்பரப்பலகைகள் வைக்க எவ்வித அனுமதியும் அளிக்கப்படமாட்டாது

Onetamil News
 

அரசியல் கட்சி சார்பாக விளம்பரப்பலகைகள் வைக்க எவ்வித அனுமதியும் அளிக்கப்படமாட்டாது ;தூத்துக்குடி மாவட்டத்தில் விளம்பரப் பலகைகள் வைப்பது வழிமுறைகள் ;  கலெக்டர் தகவல் 


                                      
தூத்துக்குடி 2019 செப் 10 ;தூத்துக்குடி மாவட்டத்தில் விளம்பரப்பலகைகள் வைப்பது தொடர்பான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விளம்பரப் பலகைகள் வைப்பது வழிமுறைகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 19.12.2018 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் 07.08.2019 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றின்படி, அரசு கடிதம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடித எண். 277/ஆ.ஊ.ஐ/2019-3 நாள் 15.02.2019-ன்படி,உயர்நீதிமன்றத்திலிருந்து மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அரசியல் கட்சி சார்பாக விளம்பரப்பலகைகள் வைக்க எவ்வித அனுமதியும் அளிக்கப்படமாட்டாது.
விளம்பரப்பலகைகள் வைப்பது தொடர்பான வழிமுறைகள் :
      டிஜிட்டல் பேனர்கள் / தட்டிகள் (Digital Banners/Placards)  ஆகியவற்றின் அதிகபட்ச அளவு அவை நிறுவப்பட உள்ள சாலையின் அகலத்திற்கேற்றவாறு விதிகளின்படி அமையவேண்டும்.
      கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், சாலை முனைகள், தெரு சந்திப்புகள் ஆகியவற்றிலிருந்து 100 மீட்டர் தூரம் வரை டிஜிட்டல் பேனர்கள் / தட்டிகள் (Digital Banners/Placards)  வைக்க கூடாது.  மேலும் அறிவிக்கப்பட்ட நினைவு சின்னங்கள், சிலைகள் மற்றும் இதர சுற்றுலா முக்கியத்துவம் உள்ள இடங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் / தட்டிகள் (Digital Banners/Placards)  வைக்க கூடாது. 
     அனுமதி இல்லாத மற்றும் சட்டத்திற்கு புறம்பான டிஜிட்டல் பேனர்கள் /தட்டிகள் (Digital Banners/Placards)  வைக்க கூடாது.
சட்டத்தின் ஷரத்துகள் மற்றும் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டுள்ள விதிகளை மீறும் அல்லது மேற்படி சட்டம் மற்றும் விதிகளை செயல்படுத்தும் அலுவலர்களை தடுக்கும் எவர் ஒருவரும் ரூ.5,000/- அபராதம் அல்லது ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார்கள்.
       முன் அனுமதி இல்லாமல் எவ்வித விளம்பரம் மற்றும் தகவல் அடங்கிய டிஜிட்டல் பேனர்கள் /தட்டிகள் (Digital Banners/Placards)   ஆகியவற்றை எவர் ஒருவரும் வைக்க கூடாது.  மீறினால் காவல்துறையில் குற்றவழக்கு பதிவு செய்யப்படும். அனுமதி காலம் முடிந்தவுடன் டிஜிட்டல் பேனர்கள் /தட்டிகளை (Digital Banners/Placards)   பாதுகாப்பாக பொது மக்களுக்கு எந்த வகையிலும் பாதிக்காத வகையில் அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் அகற்ற வேண்டும்.
     டிஜிட்டல் பேனர்கள் /தட்டிகள் (Digital Banners/Placards)  வைக்க அனுமதி பெற்ற நபர் டிஜிட்டல் பேனர்கள் /தட்டிகள் (Digital Banners/Placards)  அடிபாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி எண், நாள், செல்லுபடியாகும் காலம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் /தட்டிகளின் (Digital Banners/Placards)  எண்ணிக்கை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.  அவ்வாறு இல்லை எனில், அவை சட்டத்திற்கு புறம்பானவை என கருதப்பட்டு உடனடியாக அகற்றப்பட வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo