Onetamil News Logo

பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,செய்தியாளர்களுடன் ஆய்வு 

Onetamil News
 

பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,செய்தியாளர்களுடன் ஆய்வு 


ஓட்டப்பிடாரம் ஊராட்சிஒன்றியம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில்ராஜ், செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
          தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சிஒன்றியம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட் பட்டபகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகளை மாவட்டஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், முன்னிலையில் செய்தியாளர்களுடன்  செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சிலோன் காலனி இ சேவை 
 மையத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் கடந்த ஆகஸ்ட் 15 ல் கிராம சபை கூட்டத்தின் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் மீது ஆய்வு செய்தார். தொடர்ந்து சிலோன் காலனி வழியே செல்லும்,உயர் மின்னழுத்த மின் கம்பிசெல்லும் இடத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சியில் ரேஷன் கடை,சமுதாயநலக்கூடத்தை ஆய்வு செய்தார். மேலும்  பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில்,கட்டபொம்மனின் வரலாற்றை பறை சாற்றும் வகையில் ஒலிஒளி காட்சிஅமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார். 
இந் நிகழ்ச்சியில்  ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜன்,வட்டாட்சியர் நிஷாந்தினி, வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்  வெங்கடாசலம், பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர்  கமலாதேவி யோகராஜ், செயலர்  சுப்பிரமணியன் மற்றும் அரசுதுறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo