Onetamil News Logo

தூத்துக்குடியில் 74வது சுதந்திரதின விழா ;மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

Onetamil News
 

தூத்துக்குடியில் 74வது சுதந்திரதின விழா ;மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


தூத்துக்குடி 2020 ஆகஸ்ட் 15 ;கொரோனா காலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் வியாபாரக்கடன் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனையின் படி தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகளவில் கடன்களை வழங்கி வந்தது. 
தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கான கடன்களை அதிகளவில் வழங்கியதற்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருப்பவர் இரா.சுதாகர். இவர் கடந்த ஆண்டு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக சுதாகர் பதவியேற்ற பின்பு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கிளை வங்கிகளுக்குச் சென்று ஆய்வு செய்து அந்தந்த வங்கியின் மேலாளருக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன்களை அதிகளவில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதனுடைய கிளை வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுவுக்கு கடன் மற்றும் சிறு வியாபாரக்கடன் உள்ளிட்ட கடன்களை விண்ணப்பம் செய்த இரண்டு நாட்களில் கடன் வழங்கப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுயஉதவிக் குழு கடன் அதிகளவில் வழங்கியதற்கான விருதை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகரிடம் அதற்கான விருதை வழங்கினார். அனைத்து கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அவரைப் பாராட்டினர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo