வல்லநாடு அரசு மாதிரி பள்ளி ஆங்கில ஆசிரியை மங்களேஸ்வரியை பாராட்டிய மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன்
தூத்துக்குடி 2023 செப் 9 ; வல்லநாடு அரசு மாதிரி பள்ளி ஆங்கில ஆசிரியை மங்களேஸ்வரி அவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு மாணவிகள் பொதுத்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் ரூபாய் ஆயிரம் பரிசுத்தொகை வழங்குவது வழக்கமாகக் கொண்டு உள்ளார். . இந்த முறை சென்ற கல்வியாண்டில் தேர்வு எழுதிய மாணவ மாணவியர் மங்கலஸ்வரியிடம் 2ம் வருடமாக பயின்றதால் எளிதாக 90 மதிப்பெண் பெறக்கூடும் என்பதால் 95 மதிப்பெண் எடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். . 14 மாணவியர் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இரண்டு மாணவியர் 99 மதிப்பெண்களும் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரையும் 30. 8. 23 அன்று கோவில்பட்டியில் அவர் கற்றுக்கொடுத்த அப்பள்ளிக்கு சென்று ,கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, கோவில்பட்டி,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியை ஜெயலதா, முன்னிலையில் அனைத்து மாணவிகளையும் அழைத்து ஊக்குவித்தார். மேலும் மங்களேஸ்வரி எழுதிய MAD - Irregular verbs என்ற புத்தகத்தையும் வழங்கி வாழ்த்து கூறினார். ஒன்பதாம் வகுப்பில் சென்ற கல்வி ஆண்டில் மங்கலேஸ்வரியிடம் பயின்ற மாணவிகள் அவர் சொல்லும் அத்தனை (ஆக்டிவிட்டீஸ்) செயல்பாடுகளையும் செய்து அவருக்கு உறுதுணையாக இருந்ததோடு அவர்களின் திறனையும் வளர்த்துக் கொண்டதால் அவர்களுக்கும் புத்தகத்தினை இலவசமாக 30 புத்தகங்கள் வழங்கினார்.இதில் .மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் ஆங்கில ஆசிரியை மங்கலேஸ்வரி பணியினைப் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.