Onetamil News Logo

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மரக்கன்றுகள் நடுவிழா மற்றும் மரக்கன்று வழங்கும் விழா 

Onetamil News
 

வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மரக்கன்றுகள் நடுவிழா மற்றும் மரக்கன்று வழங்கும் விழா 


தூத்துக்குடி 2020 செப் 14 ;வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மரக்கன்றுகள் நடுவிழா மற்றும் மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது, அவரை தொடர்ந்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு இளங்கோவன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன், முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மரக்கன்றுகள் நட்டனர். 
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும்  மரங்கன்றுகள் நடுவதற்கு உட்கோட்டவாரியாக தூத்துக்குடி நகரம், தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், மணியாச்சி, விளாத்திக்குளம் மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 உட்கோட்டங்களுக்கும் மொத்தமாக சுமார் 400 மரக்கன்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்  வழங்கினார். 
பின் கொடிய கொரோனா பாதிப்புகள் இருக்கும் இந்த சூழ்நிலையில் கூட கடமையுணர்வுடன் எவ்வித விடுப்பும் எடுக்காமல் மிகுந்த கஷ்டங்களுக்கிடையே சிறப்பாக பணியாற்றிய 14 தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் பணியை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு வழங்கினார். பின் அவர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், இந்த உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு காடுகள் தேவை. மேலும் நாம் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகிறோம். உலகில் உள்ள அனைவரும் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றிக் கொண்டிருந்தால் சுத்தமான ஆக்ஸிஜனுக்கு நாம் எங்கு செல்வது? அதற்காகத்தான் இயற்கை, நமக்கு மரங்களை படைத்து அதன் மூலம் சுத்தமான ஆக்ஸிஜனை நமக்கு கொடுத்து, கார்பன்டை ஆக்ஸைடை மரங்கள் எடுத்துக் கொள்கிறது. மரங்கள் செடி, கொடிகளும் ஒரு உயிரினம் தான், அவைகளுக்கு உயிருள்ளது. இவற்றின் மூலமே நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். அதனால் நாம் அனைவரும் கண்டிப்பாக மரம் வளர்க்க வேண்டும் என்றும், காவல்துறையினராகிய நாம் பொதுமக்களுக்கு சேவையாற்றத்தான் வந்துள்ளோம், பொதுமக்களின் நலனே நமக்கு மிக முக்கியம்  என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் ஜாகீர் உசைன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன்,  நடராஜன், கிருஷ்ணமூர்த்தி சுனைமுருகன்  மற்றும் தலைமை காவலர் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணைக் காவல்  கண்காணிப்பாளர் இளங்கோவன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo