Onetamil News Logo

தூத்துக்குடி  மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து 

Onetamil News
 

தூத்துக்குடி  மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து 



தூத்துக்குடி 2021 பிப்ரவரி 21 ;தூத்துக்குடி  மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து கூறினார். 
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பணிமாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்கள் விபரம் : புதுக்கோட்டை ஞானராஜ் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி மது விலக்கு  பழனிச்சாமி திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குற்றப்பிரிவிற்கும், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு சிவசங்கரன் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு பிரிவிற்கும், கோவில்பட்டி கிழக்கு சுதேசன் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கும், மாசார்பட்டி முத்துராமன் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சிக்கும், கோவில்பட்டி மேற்கு அய்யப்பன்  திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடிக்கும், விளாத்திக்குளம் அனைத்து மகளிர் நாகலெட்சுமி திருநெல்வேலி மாநகரத்திற்கும், கழுகுமலை கஸ்தூரி வள்ளியூர் குற்றப்பிரிவிற்கும், தெர்மல்நகர் கோகிலா சுத்தமல்லி குற்றப்பிரிவிற்கும், கோவில்பட்டி அனைத்து மகளிர் பத்மாவதி கன்னியாகுமரி மாவட்டம் நேசமணிநகருக்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் வனிதா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஏரல் முத்துலெட்சுமி திருநெல்வேலி மாநகரத்திற்கும், குலசேகரப்பட்டினம் . ராதிகா திருநெல்வேலி மாவட்டம் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், எட்டயாபுரம் கலா திருநெல்வேலி மாநகரத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அன்னபூரணி கன்னியாகுமரி மதுவிலக்குப்பிரிவிற்கும், தூத்துக்குடி மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்திற்கும், ஆத்தூர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கும், மணியாச்சி  பட்டாணி கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளைக்கும், கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு சுகாதேவி  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்கும், ஆறுமுகநேரி செல்வி திருநெல்வேலி மாவட்டம் உவரிக்கும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் பிரேமா திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிருக்கும், தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு பிரேமா திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அனைத்து மகளிருக்கும், பசுவந்தனை  பாஸ்கரன் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திற்கும், ஸ்ரீவைகுண்டம் ஜோசப் ஜெட்சன்  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கும், கோவில்பட்டி மதுவிலக்குப்பரிவு குமாரவேல் திருநெல்வேலி மாநகரத்திற்கும், தூத்துக்குடி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு மீஹா திருநெல்வேலி மாநகரத்திற்கும் ஆகிய 26 காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பணிமாறுதலில் செல்கின்றனர்.
மேற்படி பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களை இன்று (21.02.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அனைவரையும் நேரில் அழைத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த காலங்களில் சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளீர்கள், அதற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், நீங்கள் செல்லும் காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றினால் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும், ஆகவே நீங்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துக்கூறி, அந்த காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நினைவுப்பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo