Onetamil News Logo

தீபாவளி ஒளி நிரம்பிய விழா ;தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் !!

Onetamil News
 

தீபாவளி ஒளி நிரம்பிய விழா ;தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் !!


தீப ஒளி திருநாள் வாழ்வில் இனிமை பொங்கச் செய்யும் ஓர் இனிய நாளாகும். தீபாவளி ஒளி நிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா.
இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் இருள் அகல்வதற்கு பாதை போடுகிறது இந்த தீபாவளி திருநாள்.
பொதுவான நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரச் செய்யும் குளியல் ஆகும்.
எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு.
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.
தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம்.
ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் வளம் மென்மேலும் வளரும்.
 எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள் !
பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, “தீபாவளிக் காய்ச்சல்” என்றொரு சங்கதி இருந்ததுண்டு. தீபாவளி நாளுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பிருந்தே தாய்மார்கள் தம் கைப்பட பலகாரங்களைச் செய்வதிலும், இளம்பெண்கள் தம் கைகளுக்கு மருதாணி இடுவதிலும், அப்பாக்கள் குழந்தைகளுக்கு பட்டாசும், புத்தாடையும் தேர்ந்தெடுக்க சந்தைக் கடைகளில் ஏறி இறங்குவதுமென, ஒவ்வொரு வீட்டிலும் களைகட்டும் உற்சாகம்தான், ஆனந்தக் காய்ச்சலாக ஊரெங்கும் தொற்றியிருக்கும்! தீபாவளி தினத்தன்று, எண்ணெய்க் குளியல், புத்தாடை, படையல், பலகாரம், பட்டாசு, உறவினர் நண்பரோடு குதூகலம் என அமர்க்களப்படும். ஆனால், சமீப வருடங்களில் ஏனோ நமது இந்தக் கொண்டாட்ட மனநிலை, அதுவும் நகரங்களில் குறைந்து வருவது நம் அனைவரது மனசாட்சியிலும் எதிரொலிக்கத்தான் செய்கிறது.
                  
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து நீராடினால் மன வருத்தம் குறையும்.
திங்கட்கிழமை உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவையும் குறைக்கும். புதன்கிழமை செல்வத்தை பெருக்கும். வியாழக்கிழமை உடல் நலத்தை பாதுகாக்கும்.வெள்ளிக்கிழமை அதிக செலவையும் குறைக்கும்.சனிக்கிழமை விரும்பியவற்றை அடையலாம்.
                                                                                                                                                 எப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது?
சஷ்டி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தி, அஷ்டமி, பிரதமை, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளிலும் உத்தரம், கேட்டை, திருவோணம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களிலும் எண்ணெய் நீராடக்கூடாது என்றும் அவ்விதம் செய்ய நேரிட்டால் சிறிது நெய் கலந்து எண்ணெய் தேய்த்து குளிக்கக்கலாம்.
பொதுவாக அறநூல்களில் காலை 8.30 மணிக்கு முன்பும், மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
                                                                                                                                             எண்ணெய் தேய்த்து குளிப்பதன் நன்மைகள் :
எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை, உடல் எல்லாம் தேய்த்து குளிக்க வேண்டும்.
மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும். இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.
இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம்.
உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ அல்லது ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.
சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் நீராடுவது நல்லது. விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணெய் குளியலை சனியன்று செய்வது நல்லது.
எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்ய கூடாதவை :
எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு தூங்கினால் பலன் இருக்காது. இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கும். அப்போது தூங்கினால் உடல் பாதிக்கும்.
உடல், தேய்த்து வைத்திருக்கும்போது கண்ணாடி பார்க்க கூடாது.பழங்கள், மோர், தயிர், பால், ஜூஸ், ஐஸ்க்ரீம், போன்ற எந்த குளிர்ச்சி பொருட்களையும் உண்ணக் கூடாது.
ஓடி ஆடி வேலை செய்யவோ, விளையாடவோ கூடாது. முழுக்க முழுக்க ஓய்வாக இருக்க வேண்டும் ஆனால் தூங்கக் கூடாது.         
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo