டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி 2020 சனிக்கிழமை டிச 05 ;டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளின் நலன்களுக்கு ஆதரவு தரும் திமுகவின் போராட்டத்தால் டெல்லி போல தமிழகம் குலுங்கட்டும் என்று ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடியில் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடியில் சிதம்பரநகர் பஸ் ஸ்டாப் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமைதாங்கி பேசுகையில் மத்திய அரசின் வேளாண் சட்டம் மூலமாக பொருட்களை பதுக்கும் நிலை ஏற்படும் ஆகையால் 1969 ஆம் ஆண்டு முதல் அத்தியாவசிய பொருட்களாக பட்டியலில் இருந்த பொருள்களை நீக்கியுள்ளனர்.
திருத்தப்பட்ட வேளாண் சட்டத்தால் கார்ப்பரேட் கம்பெனிகளே பயனடைய முடியும். ஏழை எளிய,விவசாய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.இதனால் விவசாயிகள் வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் வேளாண் திருத்தச்சட்டம் சிறப்பாக உள்ளதாக பாரத பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து மக்களிடம் பொய் பரப்புரை செய்து வருவதாக அவர் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்.ஆர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏக்கள் ஜி.வி மார்க்கண்டேயன், குமரகுருபர நாதன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல், ஜெயக்குமார் ரூபன், முன்னாள் கவுன்சிலர் கோட்டுராஜா, முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கோவில்பட்டி சுப்பிரமணியன், கோவில்பட்டி முருகேசன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.