Onetamil News Logo

திமுக ஆட்சி அமைக்கிறது  ;  21 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களின் பதவியைப் பறித்தால் மீண்டும் இடைத்தேர்தல்

Onetamil News
 

திமுக ஆட்சி அமைக்கிறது  ;  21 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களின் பதவியைப் பறித்தால் மீண்டும் இடைத்தேர்தல்


   சென்னை:
திமுக ஆட்சி அமைக்கிறது  ;  21 அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களின் பதவியைப் பறித்தால் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
21அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்களின் பதவியைப் பறிக்க கொறடா பரிந்துரை செய்ததை ஏற்று சபாநாயகர் தனபால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 21 எம்.எல்.ஏ.க்களும் அளிக்கும் பதிலைப் பொறுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளார்.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வகுத்துள்ள திட்டப்படி 21 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆட்சியைத் தக்க வைக்க இந்த அதிரடியை அவர்கள் மேற்கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
21 எம்.எல்.ஏ.க்களை நீக்கினால் அது அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்தாகிவிடும் என்ற யதார்த்தமான நிலையை எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே 21 எம்.எல்.ஏ.க்களை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் இந்த வியூகத்தை கையில் எடுத்துள்ளனர்.ஒருவேளை டி.டி.வி. தினகரனையும், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக காலி செய்ய 21 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கும் அதிரடியில் எடப்பாடி பழனிசாமி மிகவும் துணிச்சலாக ஈடுபடலாம் என்ற கருத்தும் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது. அத்தகைய அதிரடி பாய்ந்தால் 21 எம்.எல்.ஏ.க்களின் தொகுதியும் பிரதிநிதித்துவம் இல்லாமல் காலியாகிவிடும்.
ஏற்கனவே ஜெயலலிதா மரணம் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில் 21 தொகுதிகள் காலியானால் 21 இடங்களுக்கு இடை தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.சட்ட விதிகளின்படி ஒரு தொகுதி காலியான அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் 21 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் இடைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் 21 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்தால் எத்தனை தொகுதிகளில் அ.தி. மு.க. வெற்றி பெறும் என்பதில் உறுதி இல்லை. அ.தி. மு.க. மீது மக்கள் மத்தியில் சற்று அதிருப்தி ஏற்பட்டு இருப்பதால் 21 தொகுதிகளையும் அ.தி.மு.க.வால் தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம்.
அதே சமயத்தில் 21 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக, அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மிகவும் நம்பிக்கையோடு சொல்கிறார்கள். தற்போது தி.மு.க. வுக்கு காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் சில கட்சிகள் ஆதரவு கொடுக்கும் நிலையில் உள்ளன.எனவே கூட்டணி கட்சிகள் உதவியுடன் 21 தொகுதிகளையும் கைப்பற்றி விட முடியும் என்று தி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.
அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், அடுத்து அ.தி.மு.க. ஆட்சி பெரும்பான்மை பலத்தை தானாகவே இழந்து விடும். அந்த சமயத்தில் தி.மு.க. பெரும்பான்மை பலத்தை பெற வாய்ப்புள்ளது. அது தி.மு.க. ஆட்சிக்கு வர வழிவகை செய்யும் என்கிறார்கள்.
தற்போது சட்ட சபையில் தி.மு.க.வுக்கு 89 எம்.எல். ஏ.க்கள் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தி.மு.க. ஆதரவு பெற்ற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. இருக்கிறார்.
ஆக சட்டசபையில் தற்போது தி.மு.க. கூட்டணிக்கு 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
21 தொகுதிகளில் தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெற்றால் தி.மு.க.வின் பலம் சட்ட சபையில் 109 ஆக உயரும். கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையையும் சேர்த்தால் சட்டசபையில் தி.மு.க. கூட்டணியின் பலம் 118 ஆக உயரும்.
தமிழக சட்டசபையில் ஆட்சி அமைக்க 117 எம்.எல். ஏ.க்கள் ஆதரவு தேவை. கூடுதலாக ஒரு எம்.எல்.ஏ. பலத்துடன் ஆட்சிக்கு வந்து விட முடியும் என்று தி.மு.க.வினர் நினைக்கிறார்கள்.
எனவே 21 எம்.எல்.ஏ.க் கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்களா? என்று தி.மு.க.வினர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு விடும். அதன்பிறகு சூழ்நிலைகள் எப்படி மாறும் என்பதை கணிக்க இயலாது.
எனவே அ.தி.மு.க. ஆட்சி மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை தி.மு.க.வினர் விரும்பவில்லை. 21 எம்.எல். ஏ.க்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் மிக எளிதாக ஆட்சிக்கு வர வாய்ப்பு இருப்பதாக ஒட்டு மொத்த தி.மு.க.வினர் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo