திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் 50வது பிறந்த நாள்,தூத்துக்குடியில் மாற்றும் திறனாளி ஜஸ்டின் 100பேருக்கு அன்னதானம் வழங்கினார்
தூத்துக்குடி 2023 மார்ச் 16; திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் 50வது பிறந்த நாள்,தூத்துக்குடியில் மாற்றும் திறனாளி ஜஸ்டின் 100பேருக்கு அன்னதானம் வழங்கினார். தூத்துக்குடியில் உதயநிதி பிரஸ் ஜூஸ் பார் மற்றும் மில்க் ஷேக் கடையின் உரிமையாளர் மாற்றுத்திறனாளி ஜஸ்டின், மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கின்ற பொழுது, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பைக்யில் சென்று உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஜஸ்டின் பேசியுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறிவுறுத்தலின் பெயரில் தூத்துக்குடி எஸ்.ஜோயல், மாற்றுத்திறனாளி ஜஸ்டினுக்கு பல உதவிகளை வழங்கி வாழ்வில் கை தூக்கி விட்டவர். திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் தூத்துக்குடி எஸ்.ஜோயல். இதன் காரணமாக ஜஸ்டின் நன்றி மறவாமல் ஜோயல் பிறந்தநாள் இன்று, ஏழை எளியோருக்கு,முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.