Onetamil News Logo

நடு இரவில் அழைத்தாலும் கோபம் வராத குணம்,40 ஆண்டுகளாக மாதச் சம்பளம்,வாங்காமல் பணி செய்யும் சென்னை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் டி.வி.தேவராஜன் MBBS, MD, FRCP(G), D.Sc., 

Onetamil News
 

நடு இரவில் அழைத்தாலும் கோபம் வராத குணம்,40 ஆண்டுகளாக மாதச் சம்பளம்,வாங்காமல் பணி செய்யும் சென்னை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் டி.வி.தேவராஜன் MBBS, MD, FRCP(G), D.Sc., 


மாதச் சம்பளம் வாங்காத சென்னை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் டி.வி.தேவராஜன் MBBS, MD, FRCP(G), D.Sc.,மென்மையான குரல், நடு இரவில் அழைத்தாலும் கோபம் வராத குணம், நோயாளிகள் சொல்வதைப் பொறுமையுடன் கேட்கும் பண்பு, இவை அனைத்தும் ஒருங்கே பெற்றவர்தான் டாக்டர் டி.வி.தேவராஜன்.
 இவை எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று, கடந்த நாற்பது ஆண்டுகளாக ஒரு ரூபாய் பணம் கூட வாங்காமல் மாணவர்களுக்கு மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் (General Medicine,Cardiology)
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்தப் பேராசிரியர். 
               டாக்டர் டி.வி.தேவராஜன், பி.சி. ராய் (சிறந்த ஆசிரியருக்கான விருது), பத்மஸ்ரீ விருது பெற்றவர். ராய் விருதை அன்று வழங்கியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றார்.
""ஏன் பணம் வாங்குவதில்லை?'' என்று கேட்டோம்:
""ஆரம்பத்தில் இருந்தே பணம் எனக்கு ஒருபொருட்டாக இருந்ததில்லை. அதனால் நான் எதோ பெரிய கோடீஸ்வரன் என்று யாரும் நினைக்கவேண்டாம். நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் தான். 
கஷ்டப்பட்டுத்தான் நானும் மருத்துவம் படித்தேன். வெறும் எம்.பி.பி.எஸ். என்றால் எந்த ஒரு பயனும் இல்லை என்று அன்றே எனக்குத் தோன்றியது. அதனால் மருத்துவத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்து, மேலும் படித்து முடித்தேன்.
               (கிட்டத்தட்ட ஆங்கில எழுத்துகளில் பாதிக்கும் மேல் பட்டமாக இவர் பெயருக்குப் பின்னால் உள்ளது)
எனக்குச் சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் மருத்துவமனையில் வேலையும் கிடைத்தது. காலையில் பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு மாலையில் வரும் மக்களுக்கு வைத்தியம் பார்க்க முடிவெடுத்தேன். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.மாதச் சம்பளம் வாங்கினால் உன்னை எங்கு வேண்டுமானாலும் மாற்றம் செய்யமுடியும். மூன்று வருடத்திற்கு மேல் இடமாற்றம் உண்டு என்றார்கள், எனக்கோ மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி போதிப்பது தலையாயப் பணியாகப்பட்டது.
இதை விட மனமில்லை. எனவே மாதச் சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டேன். சுமார் நாற்பது ஆண்டுகளாக இன்று வரை எந்தப் பணமும் வாங்காமல் மாணவர்களுக்கு என்னால் முடிந்தவரை தொடர்ந்து பாடம் கற்றுத் தருகிறேன்.அதில் ஓர் ஆத்ம திருப்தி. இன்று பல மருத்துவர்கள் என் பெயரை சொல்லி என் ஆசிரியர் என்று சொல்லும்போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
                    நான் வேலை செய்யும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இந்தியாவிலேயே முதன் முறையாக அட்வான்ஸ் டு ஃபீவர் கிளினிக் என்ற ஒன்றைத் தொடங்கி உள்ளேன். இதன் மூலம் 175 நோயாளிகள் இன்று வரை குணமாகி உள்ளார்கள், இந்த ஃபீவர் கிளினிக்கில் ஐந்து நாட்களுக்கு மேல் ஜுரம் தொடர்ந்து இருந்தால் பல்வேறு சோதனைகள் செய்து, ஏன் ஜுரம் தொடர்ந்து இருக்கிறது என்று கண்டுபிடித்து அதைக் குணமாக்குகிறோம்.
இரண்டு விஷயங்கள் என்றுமே எனக்கு மனநிறைவைத் தரும். அதில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது முதல் இடத்தைப் பெறுகிறது. இரண்டாவது நான் தலைமை ஆசிரியர் பொறுப்பில்  இருந்து டெக்ஸ்ட் புக் ஆப் மெடிசின் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளிவர இருக்கிறது.இது மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகவும் உபயோகமான நூல்'' என்கிறார் சிரித்துக் கொண்டே.
                இவர் இதுவரை ஆறு புத்தகங்கள் எழுதி உள்ளார். இந்த புத்தகங்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.இவர் பல பல்கலைக்கழகங்களுக்கு கெüரவப் பேராசிரியராக இருந்துள்ளார். புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு இன்றும் இவர்தான் கெüரவ பேராசிரியர். இதே போல் பல கல்லூரிகளுக்கு எக்சாமினராக சென்று வந்துள்ளார்.
             இந்திய மருத்துவரில் சிறந்தவர் யார் என்ற பிஎம்ஜே விருதுக் குழுவில் ஒரு நீதிபதியாகவும் இருந்துள்ளார்.71 வயதாகும் டி.வி.தேவராஜனின் பொழுதுபோக்கு இசை கேட்பது, நீந்துவது மற்றும் நண்பர்களிடம் பயனுள்ள விஷயங்களைப் பேசுவது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo