Onetamil News Logo

Dr.இராஜா எஸ் . விக்னேஷ் செய்த சாதனைகள் - onetamilnews க்காக சிறப்புப் பேட்டி ; நெல்லையில் குறைந்த கட்டணத்தில் அதி நவீன மூளை, நரம்பு, தண்டு வட அறுவைசிகிச்சை

Onetamil News
 

Dr.இராஜா எஸ் . விக்னேஷ் செய்த சாதனைகள் - onetamilnews க்காக சிறப்புப் பேட்டி ; நெல்லையில் குறைந்த கட்டணத்தில் அதி நவீன மூளை, நரம்பு, தண்டு வட அறுவைசிகிச்சை  


                                                                        

தூத்துக்குடி ஜூன்  30 ; நெல்லை, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது பல்வேறு மூளை நரம்பு சிகிச்சை மையங்கள் உள்ளன.                                                                                                                                                             Dr. ராஜா எஸ். விக்னேஷ் கடந்த 3 வருடங்களாக குறைந்த கட்டணத்தில் அதி நவீன மூளை நரம்பு மற்றும் தண்டு வட அறுவை சிகிச்சைகள் செய்து வருகிறார். இவர் நெல்லை பாளை மார்கெட் சமாதானபுரத்தில் உள்ள மங்களா மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறார்.                                                  
இங்கு தலைக்காயம், முதுகு  மற்றும் தண்டுவட காயம் போன்றவற்றிக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.  மேலும் மூளைப் புற்று நோய் கட்டிகளான, மெனிஞ்சியோமா (Meningioma)   ஆஸ்ரொஸைடோமா (Astrocytoma) சி.பி. ஆங்கிள் கட்டிகள் (C.P.Angl Tumor)  போன்ற கட்டிகளுக்கு சிறப்பான சிகிச்சை நவீன முறையில் செய்யப்படுகிறது.                                                                       
 பிரத்தியோகமான சிறப்பு அதி நவீன நீயூரோ அறுவைசிகிச்சை நுண்நோக்கி மூலம் இந்த மூளைக் கட்டிகள் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்படுகிறது.  இந்த வகை கருவி சென்னை, மதுரை, கோவை, திருவனந்தபுரம் போன்ற பெருநகரங்களில் மட்டுமே இதுவரை இருந்தது.  தற்போது மங்களா மருத்துவமனையில் இந்த கருவி மூலம் மூளைக்கட்டிகள் அகற்றப்படுகிறது.                                                                        மேலும் இந்த கருவி கொண்டு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக மூளை இரத்தக் குழாய் வீக்கம் என்ற பிரச்சனைக்கு கடந்த மே 2017 அறுவை சிகிக்சை செய்யப்பட்டது.  இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒரே இடம் இங்கு மட்டுமே.  மேலும், மூளை நீர்த்தேக்கம் (Hydrocephalus) Pituitary tumors  பிட்யூட்டரி சுரப்பி கட்டிகளுக்கும் சிகிச்சை மூலம் சிறுதுளையின் வழியே சிகிச்சை அளிக்கப்படுகிறது.  
மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு, தண்டு வட கட்டிகள்  அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகிறது.  பிறந்த 1 வாரத்திலேயே பச்சிளம் குழந்தைகளுக்கு செய்யப்படுகிறது.  மேலும் தரமான தீவிர சிகிச்சை பிரிவு, செயற்கை சுவாசக் கருவி வசதிகளும் இருக்கின்றன.  மேலும் கழுத்து மற்றும் முதுகு தண்டுவட காயத்தினால், இரண்டு கைகள் மற்றும் கால்கள் செயல்  இல்லாமல் பாதிப்புகளுக்கும் சிறப்பு அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.  
தண்டு வட கட்டிகளுக்கும் (Spinal cord Tumor) அதி நவீன நுண்நோக்கி மூலம் சிறப்பான அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது.  மூளைகட்டிகள், மற்றும்  தண்டுவட சிகிச்சைகள் செய்து கொண்டு சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே வீடு திரும்பலாம்.  பொதுவாக  மூளைகட்டி, தலைகாய அறுவைசிகிச்கைள் செய்ய 2 முதல் 3 லட்சங்கள் வரை செலவு ஆகும்.                                                                                                                                                                             ஏனைய தனியார் மருத்துவமணிகளில் மூளைக்கட்டி அறுவை சிகிச்சைகளுக்கு  3 லட்சம் வரை செலவாகும் ஆனால் Dr . ராஜா எஸ்.விக்னேஷ்  ஏழை எளிய மக்களுக்காக அனைத்து செலவுகளுடன் மூளைகட்டிகளுக்கு  1 லட்சம் ரூபாயில் அறுவை  செய்து வருகிறார்.  அதே போல், தண்டுவட சிகிச்சைகளுக்கு implant அறுவை சிகிசைகளுக்கு 60,000 முதல் 75,000 வரை மட்டுமே கட்டணம்.  திருநெல்வேலியில் குறைந்த கட்டணத்தில் அதிநவீன மூளை, நரம்பு அறுவை சிகிச்சை Dr . இராஜா எஸ் . விக்னேஷ் கடந்த 3 வருடங்களாக செய்து வருகிறார்.  பெருநகரங்களில் உள்ள சிறப்பான அறுவை சிகிச்சை இப்போது நம் திருநெல்வேலியில் செய்யப்பட்டு வருகிறது.                                                                                                                                                         Dr . ராஜா, எஸ் .விக்னேஷ் சென்னை மருத்துவக் கல்லூரியில் Mch  பட்டப்படிப்பை முடித்தவர்.   பல்கலைக்கழக தங்கப் பதக்கம் பெற்றவர்.  பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில், உள்ளவர்களுக்கு மேலே சொன்ன கட்டணத்தை விடவும் மிகவும் குறைவாக அறுவை சிகிக்சை செய்து தந்து கொண்டிருக்கிறார்கள்.இவர் பணி செய்த அரசு மருத்துவமனைகளில் யாரும் செய்ய முடியாத அறுவை சிகிச்சையை மிகவும் எளிதில் வெற்றிகரமாக செய்துள்ளார்.                                                                                                                                                                          
இவரை பல நாளிதழ்கள் பேட்டி கண்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.          
மூளை, மற்றும் நரம்பு தண்டு வட அறுவை சிகிச்சைக்காக தேவைப்படுபவர்கள் மருத்துவரை நேரில் மங்களா மருத்துவமனையில் சந்தித்து ஆலோசனை பெறலாம்.  மேலும் 8144414272 என்ற தொலைபேசியிலும்,  drsvignesh78mch@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo