Onetamil News Logo

தூத்துக்குடி வி.இ ரோடு,தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார் தலைமையில் கிருமிநாசினி தெளிப்பு 

Onetamil News
 

தூத்துக்குடி வி.இ ரோடு,தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார் தலைமையில் கிருமிநாசினி தெளிப்பு 


தூத்துக்குடி 2020 மே 29  ;தூத்துக்குடியில் வி.இ ரோடு,தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் 33 வயது நபருக்கு கொரனா தொற்று உறுதியானதால் அந்த பகுதி முழுவதும் ,அடைப்பு செய்து மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார் தலைமையில் கிருமிநாசினி  தெளிக்கப்பட்டது. கிழக்கு பகுதி உதவி ஆணையர் தனசிங்  தரக்கட்டுபாடு உதவி ஆணையர்  பிரின்ஸ், சுகாதார அதிகாரி ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தூத்துக்குடியில் கத்தோலிக்க சாமியாருக்கு மே 23 ம் தேதி தோற்று ஏற்பட்டது.அதன் பின்னர் 4 நாட்கள் கழித்து தூத்துக்டுயில் மீண்டும் கொரோனா தாண்டவம் ஆடுகிறது. இதனால் அவருடன் பழகியவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் தொற்று ஏற்பட்டு முதலில் 27 பேருக்கு பாசிட்டிவ்  ஏற்பட்டு வீட்டுக்குத் திரும்பினார்கள்.. அதன் பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 15 நாட்களாக எந்த வித புதிய தொற்றும் ஏற்படாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து, பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தது. தீடீரென மும்பாய் , குஜராத், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  தொழில் நிமித்தமாக சென்று வாழ்ந்தவர்கள் அதிக பணம் கொடுத்து ஏராளமாக தனியார் வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு வரத் தொடங்கினர்.
அதன்படி கடந்த சில வாரங்களில் 1000க்கும் மேற்பட்டவர்கள் தூத்துக்குடிக்கு வந்தனர்.இவர்களை தூத்துக்குடி மாவட்ட எல்லையில் வைத்து கொரோனா பரிசோதனை நடத்தி, 9 தனிமை முகாம்களில் தங்க வைத்தனர். அவர்களில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று வரையிலும் 190 ஆக உயர்ந்தது.
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
 
Onetamil News
 
Onetamil News Birthday Wishes
 

இத படிங்க முதல்ல

விளம்பரங்கள்

Onetamil News Onetamil News
Onetamil News Logo