Onetamil News Logo

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு,வாழ்க்கை வரலாறு   

Onetamil News
 

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு,வாழ்க்கை வரலாறு   


இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு கடந்து வந்த பாதை....                                                                                                 இந்தியக் குடியரசின் மிக உயர்ந்த பதவி ஜனாதிபதி ஆகும். அவரே முதல் குடிமகனும், இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலரும் ஆவார். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அப்பதவிக்கு ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிந்து, புதிய ஜனாதிபதி பொறுப்பேற்கும் பொருட்டு தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய வேட்பாளராக  ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முன்னாள் ஜார்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு அவர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.                                                                                                    திரௌபதி முர்மு (Draupadi Murmu)  சூன் 20ம் தேதி 1958ம் ஆண்டு பிறந்துள்ளார். இவர்  இந்திய அரசியல்வாதியும் சார்க்கண்டு முன்னாள் ஆளுநரும் ஆவார். இவர் மே 2015 முதல் ஜார்க்கண்டின் 12 சூலை 2021 வரை அந்த மாநிலத்தின் 8வது ஆளுநராக இருந்தவர் ஆவார். ஜார்க்கண்டு மாநிலம் 2000ஆம் ஆண்டு உருவானதிலிருந்து ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் இவர் ஆவார். தற்போது 2022ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தல் போட்டியில் பாஜக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திரௌபதி முர்மு 20 சூன் 1958-ல் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் பிராஞ்சி நாராயண், இவர் சந்தல் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
திரௌபதி முர்மு, சியாம் சரண் முர்முவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர். திரௌபதி முர்முவின் வாழ்க்கையில் தனிப்பட்ட துயரங்கள் கணவர் மற்றும் இரண்டு மகன்களின் இழப்பு ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் பாரதீய ஜனதா மற்றும் பிஜு ஜனதா தள கூட்டணி அரசாங்கத்தின் போது, இவர் மார்ச் 6, 2000 முதல் ஆகஸ்ட் 6ம் தேதி 2002 வரை வர்த்தக மற்றும் போக்குவரத்துக்கான சுயாதீன பொறுப்பையும், மீன்வள மற்றும் விலங்கு வள மேம்பாட்டையும் ஆகஸ்ட் 6,ம் தேதி 2002 முதல் மே 16, 2004 வரை மாநில அமைச்சராக இருந்தார்.இவர் முன்னாள் ஒடிசா அமைச்சராகவும், 2000 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் ரைரங்க்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
ஜார்க்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவிலிருந்து இந்திய மாநிலத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் பழங்குடித் தலைவர் இவர் ஆவார்.                                           பள்ளி ஆசிரியையாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின் வார்டு கவுன்சிலராகி, இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரிசா மாநிலத்தில் அமைச்சராகவும், முன்னாள் ஜார்க்கண்ட் மாநில கவர்னராகவும் பதவி வகித்த அவர் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ஒரிசா மாநிலத்தின் மிக மிகப் பின்தங்கிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்தியாவில் ஏழரை சதவீதத்திற்கு மேற்பட்டு வாழக்கூடிய பழங்குடியின பெண்மணி ஒருவரை மிக உயர்ந்த பதவிக்கு வேட்பாளராக நிறுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. 
 
Onetamil News ad
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

 

Onetamil News

Onetamil News
Onetamil News Logo